|
விதித்த
மெய்யணி கற்பணி வித்தகம்
மதித்த நீதிவெண் வத்திரங் காண்கிலார்
சதித்த பொய்யணி தாங்கிமி னுக்குடை
கதித்த பாழுடல் கண்டுகண் டேகினார்.
|
16 |
|
|
|
|
விண்ணு
டுச்சுடர் விக்கிர கங்களி
மண்ணு ருக்கவி யம்பிற வற்றினுக்
கண்ணல் பூசனை யாற்றுமு றையெலாங்
கண்ணிற் கண்டுகண் ணீர்வடித் தேகினார்.
|
17 |
|
|
|
|
நெறியெ
லாங்கள்ள நீணெறி நீதிசெய்
துறையெ லாமநி யாயத்து றையகப்
பொறியெ லாந்தந்தி ரப்பொறி புல்லுமிக்
குறியெ லாங்கண்டு கேட்டுளங் குன்றினார்.
|
18 |
|
|
|
|
சென்ற
சென்றதி சைதொறுந் தூஷியம்
மன்ற மெங்கும்வ சைப்படு வாய்மதங்
கன்று சாபக்க டுங்கனல் காதுறீஇ
நின்று நின்றுதி கைத்தனர் நீர்மையார்.
|
19
|
|
|
|
|
விண்டு
பாழ்ங்கதை பேசுறு வீணரை
மண்டு காமச்செ ருக்கரை வார்மது
உண்டு ரப்பியு ருண்டலை வார்தமைக்
கண்டு கண்டுக ருத்தழிந் தேகினார்.
|
20
|
|
|
|
|
புலிவ
யப்படு புன்மறி போன்மென
வலியர் கைம்மறிந் துள்ளம லங்கிய
மெலியர் கண்கலு ழக்கண்டு வேதியர்
நலிவு கொண்டுள நைந்தனர் போயினார்.
|
21 |
|
|
|
|
தூய
மாதரு மந்துதை யாதவித்
தீய மாநகர்ச் செல்வமே லாங்குடி
போயொ ருங்கவி யப்புனி தச்சினந்
தோயு மேயெனச் சோகமுற் றேகினார்.
|
22 |
|
|
|
|
போக்குஞ்
சிந்தைப்பொ ருமலும் போதமார்
வாக்கு நேர்செல்வ ழிவில காமையும்
நோக்கி யங்கங்கு மாயங னித்துணர்
மாக்க டொக்குவ ழுத்துதன் மேயினார்.
|
23 |