|
எங்கு
செல்பவர் யாதுகு றித்துளார்
இங்கு வந்ததென் னோவென்றி யம்புவார்
துங்க யாத்திரை வேடஞ்சு மந்தலை
பங்க முற்றப திதரி வரென்பார்.
|
24
|
|
|
|
|
வளவ
னாயநம் மன்னவ னாட்டியல்
உளவ றிந்துழ லொற்றரி வரென்பார்
களவிற் காதல ரைக்கவர் வோரிவர்
கிளவி யாக்கங்கி ளக்கின்ற தீண்டென்பார்.
|
25 |
|
|
|
|
ஒறுத்து
நிந்தித்து ருத்துமண் ணோச்சினும்
பொறுத்து நம்மைப்பு றக்கணிப் பாரென்பார்
நிறுத்து நீதிநி கழ்த்துமின் னோரெலாங்
கறுத்த சிந்தையக் கள்ளுந ரேயென்பார்.
|
26 |
|
|
|
|
வாக்கில்
வேறலம் வன்றடி கொண்டியாந்
தாக்கி வேறுஞ்ச மைதிரென் பார்சிலர்
தாக்கி வேறல்ச மர்த்தன்று சாதிக்க
வாக்கின் றேற்பின்னை வாயென்னென் பார்சிலர்.
|
27 |
|
|
|
|
வெய்து
துன்பம்வி ளைப்பினுங் காக்கவோர்
பொய்சொல் லாதபு லையரென் பார்சிலர்
மெய்சி தைந்திடின் வேறுமுண் டோவொரு
செய்த வம்மது சீரிதென் பார்சிலர்.
|
28 |
|
|
|
|
ஆக்கம்
வேண்டிய றந்திறம் பேமெனாப்
போக்கு முட்டிய புல்லரி வரென்பார்
போக்கு முட்டின ரேனுநம் போற்செயார்
தீக்கொ டுந்தொழில் தேர்மினென் பார்சிலர்.
|
29 |
|
|
|
|
வழிதெ
ரிக்கும தியுடை யார்நமக்
கிழிகு லத்தர்கொ லோவென்ப ரோர்சிலர்
இழிகு லத்தரெ வர்பழி பாவத்தை
ஒழிகி லாதவ ரேயென்ப ரோர்சிலர்.
|
30 |
|
|
|
|
இன்ன
வாப்பெரும் பாலரி கழவும்
மன்னி யோர்சிலர் தட்டிம றுக்கவும்
நன்னர் நூனெறி நாடியவ் வேதியர்
துன்னி னார்கொடுஞ் சூனிய வாவணம்.
|
31 |