|
சற்று
நின்மெனச் சாற்றியங் கோர்சிலர்
உற்று முன்வந்து யர்தவ வேடத்தீர்
சொற்ற சத்தியம் யாதது சொன்மினோ
நற்றி றத்தைந யக்குதும் யாமென்றார்.
|
40 |
|
|
|
|
வினவு
மாற்றநன் றாமென மெய்யுணர்
பனவ விப்படு பாதகச் சேரியிற்
கனவி லுங்கரு துற்றில னித்தகு
மனவு ணர்ச்சியுண் டென்றும திவலோய்.
|
41 |
|
|
|
|
வஞ்ச
மாயக்கி டக்கைம றிந்துகண்
துஞ்சு மாந்தர்தொ குதியுள் ளுஞ்சிலர்
விஞ்சு சத்திய வாக்கம்வி னாவுநன்
னெஞ்சு ளாரென நேருறக் கண்டனம்.
|
42
|
|
|
|
|
தீண்ட
ரும்பெரு மாயச்செ ருக்குளார்
மூண்டு ருத்துயிர் மோசம்வி ளைப்பினும்
ஈண்டு சத்தியம் யாமெடுத் தோதலே
வேண்டு மென்றுது ணிந்தனன் மேலையோய்.
|
43 |
|
|
|
|
அங்கண்
வானத்த ரசிளங் கோமகன்
உங்க ளோடுல குள்ளள வும்முளேன்
எங்கு முண்மையி யம்புமி னீரென்ற
துங்க வாசகஞ் சோர்வுறு மேகொலாம்.
|
44 |
|
|
|
|
செய்ய
வல்லசெ யக்கெடுஞ் செய்வன
செய்ய லாமையி னுங்கெடுந் தேர்கெனா
வைய கத்துநன் னீதிவ குக்குமால்
ஐய நின்கருத் தியாதென வந்தணன்.
|
45 |
|
|
|
|
நன்று
சொற்றனை நம்பிநி தானிநீ
என்ற னுள்ளுறை யும்மிது வேயெனா
முன்று னும்ஜெக மாயைமு யக்கருக்
கின்று மெய்ம்மையி சைத்துமென் றொல்லையே.
|
46 |
|
|
|
|
மாத
யாதிரி யேகம கத்துவர்
பாத பங்கஜங் கிட்டிப்ப ராவினார்
ஏத மற்றவி ரக்ஷண்ய மாநவ
நீத சத்தியங் காட்டிநி கழ்த்துவார்.
|
47
|
|
|
|
|
நகர்புகு
படலம் முற்றிற்று.
|
|