பக்கம் எண் :

362

 
இரக்ஷணிய நவநீதப் படலம்
 

     
  தந்தை யாகி யுலகனைத்துந் தந்து மநுக்க டமைப்புரக்க
மைந்த னாகிப் புனிதாவி வடிவாய் ஞான வரமருளிப்
பந்த மறநின் றிலங்குதிரி யேக பரமன் பதாம்புஜத்தைச்
சிந்தை யாரத் தொழுதேத்திச் சேர வாரும் ஜெகத்தீரே.
1
   
  நீதி கருணை பரிசுத்த நேசஞ் சுயம்பு சாமர்த்தியம்
போத மினைய லக்ஷணங்கள் பரிபூ ரணமாய்ப் பொருந்தியணு
ஏத மிலனாய்க் காமாதி யெறிந்து பவத்தை யெரிக்கின்ற
ஆதி தேவன் சரணநிழ லடைய வாரும் ஜெகத்தீரே.
2
   
  ஆதி நரனைப் படைத்துலக மனைத்து மவனுக் கடிப்படுத்திப்
போத மொடுபாக் கியம்புனிதம் போத வருளி மனச்சான்று
மேதின் மதியு மீந்துசுயா தீனத் திருவென் றினிதுவந்த
நாதன் கருணை யுள்ளியதை நாட வாரும் ஜெகத்தீரே.
3
   
  பாவ நரங்க ளெரிநரகிற் பதையா வண்ணம் பரகதிசெல்
ஜீவ வழியைத் திறந்தொன்றாஞ் செல்வ மகவைச் சிலுவையிலே
சாவக் கொடுத்தெப் பாவிகட்குஞ் சலியா திரக்ஷை தனையருளுந்
தேவ சிநேகந் தனைநினைந்து சேர வாரும் ஜெகத்தீரே.
4
   
  சொந்த மகவை நம்பொருட்டுத் துணிந்து சாகக் கொடுத்தபிரா
உந்த மிதய மெமக்குநல்கி யுய்ம்மி னென்ன வுணராமற்
சந்த தமும்பேய்க் கிடங்கொடுத்துச் சாத னலமோ தயாபரற்கே
சிந்தா சனத்தைக் கையளித்துச் சேர வாரும் ஜெகத்தீரே.
5
   
  கோதி னீதி யிரக்கமெனுங் குணங்கண் மாறு கொள்ளமல்
தாதை யுவப்ப மாதுவித்தாய்த் தயாள வுருக்கொண் டவதரித்
நீதி யிரக்க சமரசனா நின்றுத் தரித்த நிறைகருணை
ஆதி மூலப் பரம்பொருளை யடுக்க வாரும் ஜெகத்தீரே.
6
   
  மண்ணைவிழுங்கக் கொதித்தெழும்பி வருந்தீயாற்றைக்                                           கடப்பதற்கு
வெண்ணெய்ப் பாலஞ் சமைப்பார்போல் வேத நாதன் வெகுளிசுய
புண்ணி யத்தாற் றீருமெனப் புலம்ப வேண்டாம் புரைதீர்ந்த
அண்ண லேசு குருதிமுகந் தவிக்க வாரும் ஜெகத்தீரே.
7