|
நிதா
சனத்தண் டையினிற்க நீதி மானுக் கும்மரிதேற்
கோதோர் பாபாத் துமங்களுக்குக் கூடு மோகூ டாதெனவே
வேதா க்ஷரங்கள் விளம்புகின்ற மெய்யைக் கருதி விரைந்தின்னே
தாதா கிருபா சனத்தண்டை சார வாரும் ஜெகத்தீரே.
|
8 |
|
|
|
|
நம்மைப்
படைத்துக் காத்துவரு நாத னிதர தேவர்களை
நம்மைப் போல வணங்காதீர் நாமே கருத்த ரெனநவின்ற
செம்மை மொழியைக்கருத்தித்தித் தெய்வப்பதரைச் சீத்துவிட்டு
வம்மின் றிரியே கப்பெருமான் மலர்த்தாள் வணங்க ஜெகத்தீரே.
|
9 |
|
|
|
|
விக்கி
ரகநம் மிணையாக்கி விழுந்து வணங்கும் விழலரைநம்
உக்கிர கோபந் தகிக்குமென வுரைத்த கடவு ளுமைமுழுதும்
நிக்கிர கஞ்செய் திடுமுன்னர் நீச வுருவா ராதனமாம்
அக்கிர மம்விட் டியேசுதிரு வடியை யடைமின் ஜெகத்தீரே.
|
10 |
|
|
|
|
தூய
நினைவா லன்றிநம்பேர் சொல்லி வழங்குந் துர்ஜநரைக்
காயு நமது சினமென்ற கடவு ளுரையைக் கருதாமல்
வாயில் வந்த படிபிதற்றி மதியா தொழுகன் மகாபாவம்
நேய மிகுமெய்ப் பத்தியுட னினைத்து வழுத்தும் ஜெகத்தீரே.
|
11 |
|
|
|
|
அனைத்து
நமக்குக் கையளித்த வகண்ட பரிபூ ரணன்றம்மை
நினைத்து லோக வியாபார நிறுவி வணங்க வாரத்தோர்
தினத்தை விதித்தா ரந்நாளைத் தீட்டுப் படுத்திற் றீராத
அனர்த்தம் வருங்காண் டூமனமா வமலற் பரவும் ஜெகத்தீரே.
|
12 |
|
|
|
|
ஆயு
ணீடித் திவ்வுலகி லமர்ந்து சுகிக்க வுனது தந்தை
தாயைக் கனம்பண் ணுதியென்று சருவலோக தந்தை சொன்ன
தூய விதியை நன்னெறியின் றுணிபென் றுன்னிப் பெற்றோர்க்கு
ஞாய முடன்கீழ்ப் படிந்தியேசு நம்பற் றொழுமின் ஜெகத்தீரே.
|
13 |
|
|
|
|
கொலைசெய்
யாதே யெனப்பரம கோமான் கொடுத்த
கற்பனைக்கு
நிலமீ துதித்த குமரகுரு நியாய மிலவாச் சீறுவதுங்
கொலையோ டொக்குமென விதந்துகூறும் பொருளைக்
குறிக்கொண்டு
தலைமீ தணிந்தச் சற்குருவின் சரணைப் பணிமின் ஜெகத்தீரே.
|
14 |
|
|
|
|
தீய
வினையாம் விபசாரஞ் செய்யா திருங்க ளென்றுமகா
தூய கடவுள் வரைந்துதந்த துகடீர் விதியைத் தூமனமாய்
மாய மறவே யநுட்டித்து மனையோ டிருந்தில் லறநடத்தி
நேய மிகுர க்ஷகன்சரண நிழலை யடைமின் ஜெகத்தீரே.
|
15
|