பக்கம் எண் :

364

  இச்சை யோடந் நியமாத ரெழிலைக் கருதி நோக்கிடுவோன்
துச்சாரிகள்பங் கடைவனென்ற தூயோ னருளைத்
                                    துணைக்கொண்டு
சிச்சீயெனத்துரிச் சையெலாஞ்சேர வெறுத்துச் சீத்துவிட்டுக்
கொச்சைமதியையகற்றியெம்மான் குணஞ்சார்ந் தொழுகும்
                                        ஜெகத்தீரே.

16
   
  மீளா நரகுக் காளாக்கும் விபசா ரத்தீ வினைபுரிந்து
வாளாப் பரமா னந்தசுக வாழ்வை யிழத்தன் மதியாமோ
நாளா ரம்பத் தயல்தூற்ற நாண மழிந்து நகைக்கிடமா
மாளா முன்னே கிறிஸ்தியேசு மலர்த்தாள் வணங்கும் ஜெகத்தீரே.
17
   
  எங்குந் தமசந் நிதியாக விருக்குங் கடவுள் களவான
பங்க வினைசெய் யாதிரெனப் பகர்ந்த துணர்ந்து பரபொருளைச்
சிங்கி யெனவேவெறுத்தயாச் செல்வம்வழங்குங் கிறிஸ்துவெனும்
மங்காப்பொருளையடைந்து நித்யவாழ்வை யடைமின் ஜெகத்தீரே.
18
   
  பொய்யைப் புகலா திருங்களெனும் புனிதன் புனித கற்பனையை
அய்யோ நினையா தவமதித்தீ ரல்லும் பகலு மனவரதந்
துய்யமனச் சாட்சியைமழுக்கித் துணிந்துமுழுப்
                                 பொய்சொல்லுகின்றீர்
உய்யீ ருய்யீர் மெய்பேசி யுய்ய வாரும் ஜெகத்தீரே.
19
   
  பொய்மை தானும் வாய்மையதாம் புரைதீர்நன்மை பயக்குமெனின்
மெய்மை யாவ தெத்தீங்கும் விளையா துரைத்த லெனுங்குறளின்
நொய்மை யுரையைத் தவிர்த்துள்ள துள்ள படியே நுவலுமென்ற
தெய்வ வுரையைக் கடைப்பிடித்துச் சேர வாரும் ஜெகத்தீரே.
20
   
  நெஞ்சுத் துணிவாய்ப் பொய்பேசி நேச மொருவி யந்நியரை
வஞ்சித் தொழுகு மதியிலிகாண் மனாதி யறியு மகாதேவன்
கிஞ்சித் தேனும் விடாதுநும்மைக் கேட்குங் காலங் கிட்டுமுனம்
அஞ்சித் தீமை யகற்றியெம்மா னடிசார்ந் துய்மின் ஜெகத்தீரே.
21
   
  விரிவெள் ளரியங் கனிக்கிருப்புப் பூண்கட் டிடுமவ் விதம்போல
ஒருபொய் நிலைக்க வாயிரம்பொய் யுரைக்கவேண்டு
                                       முரைத் தாலும்
வருமே வெளிக்கு வரிலதிக மானக் கேடே மறுமையினும்
எரிவாய்ப் படுக்குமிதை விடுத்தெம் மிறையைத் தொழுமின்
                                         ஜெகத்தீரே.
22
   
  அனைத்து முடையான் பிறருடைமை யான வெதையு மாசையுடன் நினைத்தி டாதே யெனவிரித்து நிகழ்த்துங் கடைசிக் கற்பனையை மனத்து ளிருத்தி யவரவர்க்கு வகுத்த வளவின் மகிழ்ந்துசொற்பத் தினத்தைக்கழித் தெம்மானருளும் ஜீவனடைமின் ஜெகத்தீரே. 23