பக்கம் எண் :

365

  தந்தை கொடுத்த தசவிதியைத் தள்ளி யகச்சாட் சியைமழுக்கிச்
சிந்தை யுரக்க நன்றொருவித் தீமை புரிந்த நரரேங்காண்
எந்த விதத்துந் தேவசின மெரிக்கு முன்ன மெமைப்புரக்க
வந்த பரம சுதன்பாதம் வணங்க வாரும் ஜெகத்தீரே.
24
   
  ஏழை மதியாற் றுன்மார்க்கத் தெய்தற் கரிய வாழ்நாளைப்
பாழாக் கிடுவீ ரந்தோநிர்ப் பந்த முடிவு பற்றியபின்
ஊழி யூழி யழுதாலு முய்வுண் டாமோ வுளந்திரும்பித்
தாழா தின்னே யேசுதிருச் சரணைப் பிடிமின் ஜெகத்தீரே.
25
   
  எல்லாங் கொடுத்த தாதாவை யிறைஞ்சிப் பிழைக்க மதிகுலைந்து
பொல்லாங்குடற்றும் பேய்க்கடிமை புகுந்துவிலக்குங்கனி
                                          புசித்தோர்
அல்லா லமலன் பாவவினைக் காதி யென்ப தறப்பாவம்
எல்லாப் பவமு மறக்குமர னிணைத்தா ளடைமின் ஜெகத்தீரே.
26
   
  பொறுதி யுடைய தெய்வமென்று போக வரநீர் புரிபவத்துக்
கறுதி யிலையே யந்தோநும் மாவி யிறைமுன் னடுத்திடுமவ்
விறுதி நாளின் பயங்கரத்துக் கென்னோ செய்வீ ரிக்கணமே
உறுதி நாடிக் கிறிஸ்துவுக்கே யுளமீந் துய்மின் ஜெகத்தீரே.
27
   
  சர்வ ஜீவ காருணியந் தன்னா லென்றுந் தமக்குரிய
சர்வ மகிமை யுங்கனமுந் தள்ளி மநுவாய்ச் சஞ்சரித்து
சர்வ லோக தண்டனையுந் தாமே சகித்துக் கதிதிறந்த
சர்வ லோக சரணியனைச் சார வாரும் ஜெகத்தீரே.
28
   
  பாவ வழுக்கு மாத்துமத்தைப் பற்றி யிருப்ப தறியாமல்
ஆவ லொடுசிற் சிலநதிநீ ராடிற் றொலையு மெனவலைந்து
சாவீ ரீதோ ரக்ஷணிய சைலஞ் சுரந்து பெருகிவரும்
ஜீவ நதிநீ ராடுதற்குச் சேர வாரும் ஜெகத்தீரே.
29
   
  கானம் புகுந்து தனையொறுத்துக் காயம் வருத்திக் கண்மூடி
மோனம் புரிந்து தவயோக முயல வேண்டா மவரவர்தந்
தான மிருந்தாத் துமபாவச் சழக்கைக் கருதித் தனைத்தாழ்த்தி
ஞான குருவின் புண்ணியத்தை நாட வாரும் ஜெகத்தீரே.
30
 
  மனம்போம் வழியே மதிபோக்கி மயங்கிப் பலபா தகம்புரிந்து
தினம்போம் வீணே நடுநாளிற் றிகிற்குள் ளாகிக் கலங்குதிரோ
இனம்போ காதீர் மதிமோச மின்னே யெம்மா னேசுதிரு
முனம்போய் விழுந்து கெஞ்சுதற்கு முடுகி வாரும் ஜெகத்தீரே.
31