பக்கம் எண் :

366

  திரண மெனவே யுமைவாரித் தீவாய் நரகக் கடலிடத்தே
மரணச்சுழல் கொண்டுய்க்காமுன் மனப்பூருவமாய் வழிபடுவோர்க்
கரண மாகி யான்மரக்ஷை யருளு மேசு சாமிதிருச்
சரண மடைய விதுசமயஞ் சமயம் வாரும் ஜெகத்தீரே.

32
   
  ஒன்றே தெய்வ மெய்கருணை யுள்ளார் உண்மை பிழைபொறுப்பா
அன்றோ வன்று நரர்க்காக வரும்பா டடைந்து பிணையேற்று
நின்றே பலியா யுயிர்கொடுத்த நிமல னீதி யடையீரேல்
நன்றீ வார்கொ லையமிலை நம்பி வாரும் ஜெகத்தீரே.
33
   
  வேத மொன்றே மெய்யுளங்கை நெல்லிக் கனிபோல்
                                       விளங்குதிதே
நாத னொருவ ருளருலக நவிலுஞ் சான்று நற்கதியின்
பாதை யொன்றுண் டதுகிறிஸ்து மார்க்க மிதனைப் பகுத்துணர்ந்து
கோதில் பரம குருபாதங் கும்பிட் டேத்தும் ஜெகத்தீரே.
34
   
  பாவிவ யுளத்தை யூடுருவிப் பாயு மிருவாய்ப் பட்டயநம்
ஆவிக் குளவெம் பவநோயை யகற்றி யழியாப் பேரின்ப
ஜீவ னளிக்குந் தெள்ளமிர்தாஞ் சிந்தைக் கினிய தீம்பாலாந்
தேவ வசன மிதையுணர்ந்து சேரவாரும் ஜெகத்தீரே.
35
   
  தலைகீ ழாக வுலகடுக்குத் தடுமா றிடினும் வவான்சுடர்கள்
நிலைமா றிடினும் பூதியங்க ணீறு நீறாக் கரிந்திடினும்
உலவா வேதா க்ஷரங்களிலோ ருறுப்புமிதைவிட் டுய்வழிவே
றிலையாதலினீ துணர்ந்தெம்மானிணைத் தாள்வணங்கும்
                                        ஜெகத்தீரே.
36
   
  பாவ நாசஞ் செயவந்து பழுதொன் றின்றிப் பரமார்த்த
மேவு விரதி யாயுலக வேட்கை நீத்துப் பாடுபட்டு
ஜீவ கோடி களைமீட்டுச் செல்வ மோக்ஷந் திறந்து வைத்த
தேவ மைந்தன் றொழும்புசெய்யச் சேர வாரும் ஜெகத்தீரே.
37
   
  நீசப் புலைந ராத்துமத்தை நினைந்தோர் பொருளாய்ப்
                                      பிணைப்பட்டு
பாசத் தாலே பிணிப்புண்டு பதைக்க வடிக்கக் குருதிசிந்தி
நேசத் தாலே யுயிர்கொடுத்த நிமலன் றொழும்பு வெட்கமெனப்
பேசிற் பழுதா முயிர்தப்பிப் பிழைக்க வாரும் ஜெகத்தீரே.
38
   
  பொல்லா வுலகப் புரட்டர்வெறும் பொய்யை நிறைத்துக் கட்டி
எல்லாக் கதையு மெரிநரகுக் கிழுக்கும் பாச மெனவெறிந்து
                                         ருத்தி வை
சொல்லாற் பொருளாற் பழுதில்லாச் சுருதி மொழியைக் கருத்
எல்லாம் வல்ல பெருமானை யிறைஞ்ச வாரும் ஜெகத்தீரே.
39