பக்கம் எண் :

367

  பாவ பாரஞ் சுமந்துபிர பஞ்சா ரணியத் தலைந்தாத்ம
நோவுற் றிளைத்தீர் தாகித்தீர் நோக்கு மிதுதா னிரக்ஷணிய
ஜீவ வூற்று விசுவாசச் செங்கை யார முகந்தருந்திற்
சாவீ ரல்லீர் தாகியீர் சரதம் வாரும் ஜெகத்தீரே.

40
   
  ஒருசின் மயசற் குருவாகி யுலகத் துதித்து ஜீவரக்ஷை
தருசன் மார்க்க நெறியிதெனத் தமநல் லொழுக்கஞ் சான்றாகத்
துருசின் மனத்தோ டுபதேசஞ் சொல்லிச் சுகிர்த பலியாய்வெங்
குருசின் மடிந்த குருசிலைக்கை கூப்ப வாரும் ஜெகத்தீரே.
41
   
  ஒலிவா சலக்கா விடையொரிரா வுலகோர் பவமேற் றொருதனியே
மெலிவா யாத்து மத்துயர மேவி யிரத்த வெயரொழுக
நலிவாய்த் தேவ சினத்தாலே நணுகும் வாதை யனைத்துமன்பின்
மலிவாற் சகித்த பெருமானை வணங்க வாரும் ஜெகத்தீரே.
42
   
  குருசி லறையுண் டுரைக்கடங்காக் கொடிய துன்பஞ்சகிக்கையிலப்
பரிசு வருத்தும் பாதகர்க்காய்ப் பரிவோ டெந்தாய் மற்றிவர்கள்
புரிசெய் வினையீ தெனவறியார் பொறுமி னென்ற புண்ணியர்தம்
உரைசெய் யரிய வன்புநிலை யுன்னி வாரும் ஜெகத்தீரே.
43
   
  வானங் களிக்கப் புவிமகிழ வழுவாத் தெய்வ மறைபரம்ப
ஞானம் பெருக நல்லறங்க ணாளு மோங்க நனியுயர்ந்த
தான நரர்க்குக் கைகூடச் சமாதி யொருவி யுயிர்த்தெழுந்து
தீனந் தொலைத்த குமரேசைச் சேர வாரும் ஜெகத்தீரே.
44
   
  நந்தா விரக்ஷண் ணியகிரியை நலமாய் முடித்து நரஜீவ
பந்த வினையை யறநூறிப் பரலோ கத்துக் கெழுந்தருளித்
தந்தை வலபா ரிசமேவிச் சார்வ தாநந் தமக்காகச்
சிந்தை கனிந்து மன்றாடுந் தேவைப் பரவும் ஜெகத்தீரே.
45
   
  ஆதி முதலாய்ப் பிறந்திறந்தோ ரனைவோ ரையுமந் தத்துநொடிப்
போதி லுயிரோ டெழுப்பியிரு புறமு நிறுவி யவரவர்க்கு
நீதா சனத்தி லிருந்துமகா நியாயத் தீர்ப்புக் கூறமுகில்
மீது வருவார் கிறிஸ்தின்னே விரைந்து வணங்கும் ஜெகத்தீரே.
46
   
  மாய வுலக மயக்கைமுற்றும் வரைய வேண்டின் வஞ்சனைசெய்
பேயைப் புறங்கண் டிடவேண்டிற் பிடித்த துரிச்சை பிறங்காமல்
தேய வேண்டிற் புனிதமனஞ் சிறக்க வேண்டிற் றிகையாமல்
தூய பரிசுத் தாவியருள் சுறுக்காய்த் தேடும் ஜெகத்தீரே.
47