|
ஈன
மதியாற் பவம்புரிந்தே மினியென் செய்வே மிரக்ஷிப்புக்
கான வழியே தஞ்சலென வபயங் கொடுப்பா ரெவர்புனித
ஞான முறுமா றெவனென்ன நாடிக் கவன்று ணைவீரேல்
தீன தயாள சற்குருவைச் சேர வாரும் ஜெகத்தீரே.
|
48 |
|
|
|
|
மாபா
தகஞ்செய் துரோகிகள்யாம் வரையா தருடா தாவேயுங்
கோபாக் கினியைத் தாங்கவெம்மாற் கூடா தையா குவலயத்தில்
ஆபா சத்தைத் தவிர்த்தவும் தருமைக் குமர னிமித்தமெங்கள்
பாபாத் துமத்துக் கிரங்குமெனப் பணிந்து வாரும் ஜெகத்தீரே.
|
49 |
|
|
|
|
பாவ
வுணர்ச்சி மனந்திரும்பல் பச்சாத் தாபம் பரமசுதன்
ஜீவ வஸ்தை தனைநினையுஞ் சிந்தைக் கனிவு விசுவாசந்
தேவ சிநேகம் பவவெறுப்புத் திடநம் பிக்கை யிவைபரிசுத்
தாவியருளாற் பெற்றிறைவற் காட்பட் டொழுகும் ஜெகத்தீரே.
|
50 |
|
|
|
|
தம்மோர்
மகவை யும்பொருட்டுத் தந்த பரம தாதாவின்
கைம்மா றொன்றுங் கருதாத கருணைப் பெருக்கைக் கண்டிருந்து
எம்மாத்திரமு முணராம லெல்லா நாளும் பவம்புரிந்தாற்
சும்மா போமோ பெருமானைத் துதிக்க வாரும் ஜெகத்தீரே.
|
51 |
|
|
|
|
மிக்க
சம்பத் துரிமைமனை விரும்பு மக்கள் கிளைஞருற
வொக்க வொழியு மல்லாம லுயிர்போங் காலத் துடன்வருமோ
எக்கா லத்து முடனிருந்திவ் விகத்தும் பரத்துஞ் சுகம்வவழங்கத்
தக்க பெருமா னேசுதிருச் சரணைச் சாரும் ஜெகத்தீரே.
|
52 |
|
|
|
|
ஜீவ
ரக்ஷை யுளம்பதித்துத் தேக விச்சை தனைமுனிந்து
பாவ வுலகை யருவருத்துப் பசாசைச் செயித்துப் பரமார்த்தம்
மேவு சுருதி நெறியொழுகி விசுவா சத்தாற் றிரியேக
தேவைப் பரவிக் கதிகூடச் சேர வாரும் ஜெகத்தீரே.
|
53 |
|
|
|
|
ஜென்ம
வினையு மனாதிகளாற் றினமும் புரிந்த தீயகொடுங்
கன்ம வினையுங் கதிரவனைக் கண்ட பனிபோற் கழிந்தோடும்
புன்மை யகலும் புதிதான புனித மனமும் பொருந்துமதால்
தன்ம வுருவா கியவேசு சரண மடைமின் ஜெகத்தீரே.
|
54 |
|
|
|
|
விசுவா
சத்தாற் பெருஞ்சூளை வெந்தீக் கிடங்கை மேற்கொண்டா
விசுவா சத்தால் வெஞ்சீய விரிவா யடைத்தார் விறல்கொண்டா
விசுவாசத்தான் முப்பகையை வென்றார் முதுவே தியரதனால்
விசுவா சத்தாற் கிறிஸ்தரசை விரும்பி வணங்கும் ஜெகத்தீரே.
|
55 |