|
கசந்து
பவத்தை யுணர்ந்துசொரி கண்ணீர்த் திருமஞ் சனமாட்டி
இசைந்த ஜெபமா லிகைசூட்டி யிதய பீடத் தினிதிருத்தி
அசைந்தி டாமெய் விசுவாச வன்பின் கிரியை நிவேதித்துப்
பசைந்த மனமோ டேசுதிருப் பதம்பூ ஜியுமின் ஜெகத்தீரே.
|
56 |
|
|
|
|
காலைத்
துதியோ டெழுந்திருந்து கடவுண் மொழியாங்
களங்கமற்ற
பாலைப் பருகி யாவலுடன் பணிவாய் முழங்காற் படியினின்று
மூலப் பொருளாங் குமரேசை முன்னிட் டேத்தி ஜெபம்புரிந்து
சாலப்பரம தந்தையருட் டயைபெற் றுய்மின் ஜெகத்தீரே.
|
57 |
|
|
|
|
இரவிவற்
றனித்து மறைத்தீப மேற்றி யிதயத் திருணீக்கிக்
கரவற் றிலங்கும் விசுவாசக் காட்சி யாலே கருத்தாவைத்
தரிசித் துலகந் தரக்கூடாச் சமாதா னத்தைத் தருமட்டும்
பரவி ஜெபித்துன் னதபரம பதநா டடைமின் ஜெகத்தீரே.
|
58 |
|
|
|
|
பாரமான
பவஞ்சுமந்து படருற் றிரங்கும் பாவிகாள்
வாரும் வாரு மெனைக்கிட்டி வவந்தா லான்ம வவருத்தமெலாந்
தீரும் பரம பதத்துநித்ய செல்வந் தருவ னெனக்கூவும்
ஆருங் கருணைக் குமரேசை யடுக்க வாரும் ஜெகத்தீரே.
|
59 |
|
|
|
|
அய்யோ
வழிவி லாத்துமத்தை யவமே கெடுக்க லாவதுவோ
பொய்யா முலக போகமெலாம் போதும் போது முளந்திரும்பித்
துய்யோன் சரண மடைந்துபவத் தொடக்கையறுத்துத் தொலையாத
மெய்யாம் பரம சுகமடைய விரைந்து வாரும் ஜெகத்தீரே.
|
60 |
|
|
|
|
பொய்யா
தியபா வங்களெலாம் புரிதல் புகழாப் புரிந்திடுவீர்
மெய்யா ரணனார் நன்னெறியை வெறுத்து விலகி வெட்கமென்பீர்
அய்யோ விதுநன் மதியாமோ வால மமிழ்தென் றருந்துதிரோ
உய்யா வழிவிட் டுளந்திரும்பி யுய்ய வாரும் ஜெகத்தீரே.
|
61 |
|
|
|
|
வாணா
ளிரவு பகல்மாதம் வருட மாகிப் புகையேபோற்
காணா தொழிய மரணமிகக் கடுகி வருதல் கண்டிருந்தும்
நாணா ளுந்தா னுடற்போக நச்சி யான்ம நாயகனை
வீணா யிழக்க லாவதுவோ விரைந்து வாரும் ஜெகத்தீரே.
|
62
|
|
|
|
|
என்று
முமக்கு வேண்டுவன வீந்தா தரிக்குஞ் சருவேசன்
நன்றி யறிந்த கிரியையெனு நறும்பூங் கனிநீர் நல்கலிரென்
றின்றே களைகென் றிடச்சிலநா ளின்னும் பார்ப்பம் பார்ப்பமென
மன்றாடுஞ்சற் குருவருளை மறவா தேத்தும் ஜெகத்தீரே.
|
63 |