உலக
முழுதுந் தனிக்செங்கோ லோச்சி யரசு புரிந்தாலும்
இலையி லாப மாத்துமத்தை யிழந்தா லெவையு மிகந்துதத்தஞ்
சிலுவை சுமந்தென் பின்றொடரின் ஜீவ னடைவவர் திண்ணமென்ற
அலகில் கருணா கரன்வாக்கை யகங்கொண் டுய்மின் ஜெகத்தீரே.
|
64
|
|
|
மூழ்ந்த
சுற்றங் கல்விசெல்வ முயற்சி முதல் காரணமாச்
சூழ்ந்த மனமேட் டிமைகளெலா மொருங்கே தொலையத்
தொலைத்து
விட்டுத் தாழ்ந்த சிந்தை யடியுறையாத் தடக்கை கூப்பித்
தலைவணங்கி
ஆழ்ந்த கருணைக் கிறிஸ்தரசை யன்போ டேத்தும் ஜெகத்தீரே.
|
65 |
|
|
பெருமையடைந்தாற்
பொறிகலங்கும் பேதமாகும் புலன்களெலாம்
பெருமையடைந்தான் மனாதிகளும் பேதித்தொழியாப் பிரமைமிகும்
பெருமை யடைந்தா லடையாத பிறிதோர் பாவ மில்லையதாற்
பெருமையடையா தியேசுவெனும் பிரானை வணங்கும் ஜெகத்தீரே.
|
66 |
|
|
எண்ணப்
பெருமை யெட்டுணையு மில்லாக் கிருமி யனையோமுக்
குண்ணப் புசிப்பு முடைத்தூசு முதவி யிரவு பகலாகக்
கண்ணப் புறத்துச் செல்லாமற் காக்குங் கடவுட் கிரண்டகநாம்
பண்ணப் போமோ நன்றியொடு
பரவ வாரும் ஜெகத்தீரே.
|
67 |
|
|
ஜாதிப்
பெருமைக் காதாரஞ் சாசு வதநி ராதாரம்
ஜாதிப் பெருமைக் கன்புமுற்றும் ஜந்மப் பகைசால் சத்துருவாம்
ஜாதிப் பெருமை தரும்பலன்கந் தகத்தீக் கடலிற் சார்துயரம்
ஜாதிப் பெருமை விடுத்தியேசு சரணை வணங்கும் ஜெகத்தீரே.
|
68
|
|
|
தருவொன்
றுதவு கனிகள்பல சுவையைத் தருதல் சகஜமதோ
கருவொன் றினிலுற் பவித்தநர கணங்க டமிலே பலஜாதிப்
பிரிவொன் றிடுமோ வீணான பிடிவா தத்தாற் கெடுவானேன்
உருவொன் றியசற் குருநடைபார்த் துய்ய வாரும் ஜெகத்தீரே. |
69 |
|
|
ஜாதி
யிரண்டே யந்நியரைத் தனைப்போ னேசித் தாத்மார்த்த
போத மடைந்த புங்கவரே புனிதர் பிறரைப் புறக்கணித்துப்
பேத மியற்றிக் குலப்பிரமை பிடித்தோ ரீன ருமதுபிடி
வாதம் வேண்டாங் கிறிஸ்தியேசு மலர்த்தாள் வணங்கும்
ஜெகத்தீரே.
|
70 |
|
|
வேத
நெறியைக் கடைப்பிடித்து விசுவா சத்தாற் கிறிஸ்தியேசு
நாதற் றொழுதன் புடையோராய் நல்ல மனச்சா க்ஷியையடைந்து
கோதற் றொழுகிப் பரமபதங் கூடக் கருதிக் குழாங்கொண்ட
ஜாதி யொடுசேர்ந் திறைவனடி தனைப்போற் றிடுமின் ஜெகத்தீரே.
|
71
|