பண்டிவ்
வுலகு பிரளயத்தாற் பாழா னதுஞ்சோ தோங்கொமரா
மண்டி யெரிகந் தகத்தீயின் மழையான் மண்மே டாகியதும்
மிண்டர் செய்த தீவினைக்கு விளைந்த பயனென் றுணர்கிலிரோ
அண்டர் பெருமான் சீறுமுன மண்டிப் பிழைமின் ஜெகத்தீரே.
|
72 |
|
|
அன்று
பிரம னெழுதியவா றாமென் றுரைக்கு மறிவீனம்
என்று தொலையு நும்மைவிட்டிங் கெல்லா மிறைவன் செயலாயின்
நன்று தீதேன் மோக்ஷமதே னரகந் தானே னாஸ்திகராய்ப்
பொன்றவேண்டாம் புண்ணியனைப் போற்ற வாரும் ஜெகத்தீரே.
|
73 |
|
|
இதயக்
கதவைத் தாள்செறித்திட் டிகபோகத்தி லிறுமாந்து
மதியற் றலகை நடித்திடமெய் மறந்து களித்து மகிழ்கின்றீர்
பதுமக் கரத்தாற் றட்டியெம்மான் பலகாற் பரிவோ டுமைக்கூவும்
மதுரக் குரல்வந் தெட்டலையோ வல்லே திறமின் ஜெகத்தீரே.
|
74 |
|
|
மதியைக்
கெடுத்துப் பிரபஞ்ச மாய வலைக்குள் ளுமைமாட்டிக்
கொதியுற் றெழும்பு மெரிநரக கும்பிக் கிளவே கூளிசெயுஞ்
சதியைக் கருதி யவன்றெழும்பைத் தள்ளியணுச்சஞ் சலமணுகாக்
கதியைக் கொடுக்கு மேசுதிருக் கழற்காட் படுமின் ஜெகத்தீரே.
|
75 |
|
|
விழிமின்மெய்
வேதியரெனுங்குக் குடங்கள்விழித்து விளித்தனவால்
விழிமின் சுவிசே ஷக்கிரணம் வீசி யெழுந்தா னீதிரவி
விழிமின் விடியா நிசிவருமுன் விரைந்து செய்வ செயவேண்டும்
விழிமின் விழிமின் பவத்துயிலை விடுமின் விடுமின் ஜெகத்தீரே.
|
76 |
|
|
தள்ள
வரிய நியாயமிது தானென் றுணர்ந்துஞ் சாதனையாய்
உள்ள மொன்றிங் குரையொன்றா யுரப்பி வாது புரியாமற்
கள்ள மறவே விதிவிலக்கைக் கருதிப் புரிந்து கருணைமிகும்
வள்ளற் குமையே கையளிக்க வாரும் வாரும் ஜெகத்தீரே.
|
77 |
|
|
தீங்கென்
றொன்றை யறிந்தவுடன் செய்யே னென்று தேவாவி
ஒங்கு மருளைத் துணையாக்கொண் டுறுதி யாநிண் ணயம்பண்ணி
நீங்கா ததனி னிலைநின்று நெறிவிட் டயலில் விலகாமற்
றாங்குங் குமர குருசரணஞ் சார வாரும் ஜெகத்தீரே.
|
78 |
|
|
வேட
மான பொய்ப்பத்தி வெயின்முன் மஞ்சட் பூச்சதுபோல்
ஓடுங் கணமு நில்லாதிங் குறுமோர் சிறிய சோதனையில்
தோட மலது துகளளவுஞ் சுகிர்த மிலையா லிருதயத்துள்
நாடி யெழுமெய்ப் பத்தியுட னம்பற்பரவும் ஜெகத்தீரே.
|
79 |