பக்கம் எண் :

373

  வெய்யமா யக்கடை வீதி வாய்ப்படு
மையிரு ளிரிதர மறைவ லாளர்தாம்
மெய்யொளி திகழ்த்தவும் வெகுளிக் காற்றுரத்
தொய்யென வவித்ததவ் வொல்லை யென்பவே.

2
   
  சீர்த்தபு பகைமுகில் செறிந்த வித்தையாம்
நீர்த்திரை முகந்தக நிரைத்து மேல்வெளி
போர்த்திடித் துரறிமண் புழுதி போக்கிவிண்
தூர்த்தன வசைமழை சொரிந்த தெங்குமே.
3
   
  ஊக்கிய வதவகங் காரத் தொல்லென
தீக்கொடுஞ் சிகைக்கனல் சிந்தை தோறெழப்
போக்கரி தாய்த்திரண் டடர்த்துப் பொங்கியே
கூக்குரல் விளைத்தனர் கொள்ளை மாக்களே.
4
   
  கூடினர் குமுறினர் கொக்க ரித்தனர்
ஓடின ருறுமின ருருட்டிப் பார்த்தனர்
சாடினர் மறித்தனர் தடுத்துக் கிட்டினார்
கோடினர் வலித்தனர் குரைத்திட் டாரரோ.
5
   
  வைதவ ரெத்தனை மறவவர் மண்மழை
பெய்தவ ரெத்தனை பிசாசர் கோரணி
செய்தவ ரெத்தனை தீயர் தீக்கணை
எய்தவவ ரெத்தனை யிடும்ப ரென்கயான்.
6
   
  விலையுறு மாயசிற் றின்பம் வேட்டுழல்
புலையுறு மாந்தருட் பொருந்திற் றில்லையால்
கலையுறு ஞானியர் பகர்ந்த கட்டுரை
சிலையுறு பந்தெனத் திரும்பிற் றென்பவே.
7
   
  மூண்டபே ரிசைச்சலு முடுகித் தத்தமில்
ஈண்டியோர் செறுத்தெதி ரிகலி யேற்பதுங்
காண்டகங் காடியின் றலைவன் கண்டுகேட்
டாண்டணைந் தளைமறி யரவிற் சீறியே.
8
   
  பூரிய ருரையினைத் தேறிப் போந்துநீர்
ஆரிய ராயவிவ் வசட ரைப்பிணித்
தூரிய னீதியா திபனுக் குய்த்துநங்
காரியந் திரப்படக் கழறு மினென்றான்.
9