பக்கம் எண் :

374

  கலகமெங் கெனவரைக் கச்சை கட்டியங்
குலவிய மூர்க்கரவ் வுரைகொண் டொல்லையே
உலகையுள் ளுவர்த்திடு மொள்ளி யோர்தமை
விலகறப் பாசமிட் டிறுக்கி வீக்கினர்.

10
   
  வெய்துற வடித்தனர் குருதி மேலிடப்
பொய்துறு வசைமொழி புகன்று போர்த்தனர்
மெய்திகழ் முகத்துமிழ்ந் துறுமி வீம்புற
வைதன ரவமதித் திகழ்ந்து வம்பரே.
11
   
  இத்திற வின்னல்பற் பலவி யற்றிமெய்
உத்தம ரிருவரைக் கொடுசென் றோங்கிய
சித்திர நீதிமன் றணைந்து செவ்வியோய்
குத்திர மாயவர்த் தகர்நுங் கோற்குடி.
12
   
  இங்கிவர் தமைமறு கெதிர்ந்து கண்டனம்
பங்கமில் சத்தியம் பகரு வாமென
அங்கது தெரித்திரென் றவாவிக் கேட்டனர்
நங்களி லொருசிலர் நவிற்சி தேர்ந்தனம்.
13
   
  பொருவின்மா யாபுரிப் புகழும் பொற்புமெய்த்
திருவும்லௌ கீகசிற் றின்பச் செவ்வியும்
மருவிய வரம்பறு நிதியின் மாட்சியும்
பருவரற் படுகரிற் கவிழ்த்தும் பாலவாம்.
14
   
  கைப்படு காமியங் கருத்தி னீந்தருள்
மெய்ப்படு நந்தம்விக் கிரக தேவரும்
மைப்படு சமயநூன் மரபு மார்க்கமும்
பொய்ப்படு கெடுமுறைப் புலமைத் தாயவாம்.
15
   
  கலைபொருள் புகழ்பலங் கவின்கொள் காத்திரங்
குலநல முதலிய யாவுங் குப்பையாம்
வலையன மனைமகார் மருங்கு வாழுநாள்
நிலையிலா நீரெழுத் தனைய நீரவாம்.
16
   
  இன்னவோ மநுக்குலத் தெவரு மீசனாம்
பொன்னுல காளிசொற் போற்றி டாதுதந்
துன்னெறி யொழுகிய தூர்த்த ராமினி
மன்னுகோ பாக்கினி மழையும் பெய்யுமாம்.
17