|
எத்திற
முய்வெனி னிகல்செய் தீக்குணங்
கைத்தழு துணர்வொடு கருணைக் கோமகன்
மெய்த்தொழும் பாய்விதி விலக்கை யோம்பிடின்
நித்திய ஜீவநன் னிலையு நேருமாம்.
|
18 |
|
|
|
|
ஈதெலா
முத்திநாட் டிறைவவ னொப்பிடு
மேதகு விளம்பர மெனவிவ் வீம்பரே
போதனை செய்தனர் புரளி போர்த்தலின்
ஊதிய மிழந்ததெம் முலப்பில் வர்த்தகம்.
|
19 |
|
|
|
|
மாயவர்த்
தகத்துள மகிமை தேய்ந்தது
மேயவூ ரினும்பிரி வினையுண் டாயது
நாயகத் துவங்களி னாற்ற மிக்கன
ஆயகா மியமரு வருக்க லாயின.
|
20 |
|
|
|
|
பஞ்சபா
தகத்தையும் பறக்க டிக்குநம்
மஞ்செழுத் தெட்டெழுத் தாற்ற லோர்கிலார்
நஞ்செய னாசத்தை நனிவி ளைக்குமென்
றஞ்சுறா திகழ்ந்தெமை யவம தித்தனர்.
|
21
|
|
|
|
|
ஆதலிற்
றண்டனைக் கருக ரென்றியாம்
நீதியா சனத்தின்முன் னிறுவி னேமெனா
ஓதினா ருரத்துரத் துருத்துப் பன்முறை
சாதகத் திரளெனத் தறுக ணாளரே.
|
22 |
|
|
|
|
ஆங்கவ
ருரைசுடு முகனென் றாசன்த்
தோங்குநீ தாதிப னுரித்திற் கேட்டனன்
வீங்கிய வெகுளியின் வெதும்பி வேதியர்
பாங்குறத் திருமிமற் றினைய பன்னுவான்.
|
23 |
|
|
|
|
உலகெலா
மவமதித் தொழுகும் புந்தியீர்
கலககா ரணரெனக் கட்டுண் டெய்தினிர்
பலகலை பயின்றுபாழ் பட்ட தேகொலாம்
இலகுநன் மதியினி யுய்வ தெங்ஙனம்.
|
24 |
|
|
|
|
தங்குமூர்
யாதிவண் சார மூலமென்
எங்கனா சாரவே டத்தோ டேகுவீர்
இங்குவந் தித்துணைக் கலக மீட்டிய
நுங்கருத் தியாதது நுவலு வீரென்றான்.
|
25
|