|
சுடுசினச்
சுடுமுகன் சுடுசொற் சுட்டிட
அடுசினக் களிறனா யகிலத் தேபெயப்
படுசினக் கனன்மழைக் கஞ்சிப் பாவியேங்
கொடுசினத் தலகைகூட் டுறவைக் கொள்கிலேம்.
|
26 |
|
|
|
|
நிரந்தர
நலம்புரி நிகில நித்திய
துரந்தரர் திருவடித் தொழும்பு பூண்டுளேம்
வரந்தரு சுருதிமார்க் கத்து வந்தனம்
புரந்தர நாடிய போது வேமரோ.
|
27 |
|
|
|
|
இந்நக
ரிடைநெறி யெய்த வெய்தினேம்
மன்னுமா யக்கடை வர்த்த கக்குழாம்
என்னநும் விழைவுசத் தியமென் றேமது
பன்னுதி ரென்றனர் பகரக் கேட்டனர்.
|
28 |
|
|
|
|
சம்பவ
மிஃதிறை சான்று மற்றிது
வெம்புறு கலகத்தை விளைத்தற் கென்னினும்
எம்பிர யாணத்தைத் தடுத்தற் கென்னினும்
நம்புகா ரணங்கொலோ நாடு கையநீ.
|
29 |
|
|
|
|
கண்மயக்
குறிற்பொருட் காட்சி காண்கில
எண்மயக் குறினெதிர் கேடு மெண்ணில
மண்மயக் குறினவர் மறுமை யாக்கத்தின்
உண்மையைத் தெரிவரோ வுலங்கொ டோளினாய்.
|
30 |
|
|
|
|
என்றுமெய்க்
கிறிஸ்தவ ரியம்பக் கேட்டனன்
கன்றிய சுடுமுகன் கடுஞ்சி னத்தனாய்
நன்றுநன் றுண்மையை நவின்ற பான்மைநம்
மன்றன்மா யாபுரி மரபை மாய்க்கவோ.
|
31 |
|
|
|
|
தீரயாந்
தெளிந்தனஞ்சேண கர்க்கதி
தூரயாத் திரைசெலத் துணிந்து ளாரிவர்
காரியக் கெடுதிநங் கடைக்கு நேர்ந்தன
ஆரெனி னுந்நமக் காவ தென்கொலாம்.
|
32 |
|
|
|
|
ஈங்கிவர்
துணிந்திவ ணிசைத்த மாற்றமும்
பாங்குளீ ரறிந்தனிர் பகர்வ தென்னினி
நீங்கிடா வகைசிறைப் படுத்தும் நீதிமன்
ஓங்குநீ தாசனத் துறுமட் டாகவே.
|
33 |