|
ஆதலிற்
றெருத்தொறு மடித்துக் காட்டியிப்
பேதையர் தமைச்சிறைப் பெய்மி னீரெனா
ஓதினான் சேவகர்க் குருத்து டன்றனர்
நீதிமன் றுழையரா நிலவு நீசரே.
|
34 |
|
|
|
|
ஆண்டுநின்
றகற்றிவை தடித்தி ரும்பியற்
கூண்டில்வல் விலங்குகால் கொளுவிப் பெய்தொரு
பாண்டிலிட் டிழுத்தனர் பரிவில் பாமரர்
காண்டகு கடிநக ரிரைத்துக் காணவே.
|
35 |
|
|
|
|
இகழ்ந்துநிந்
தனைசெயு மிடும்ப ரோர்புறம்
மகிழ்ந்துளங் களித்திடு மறவ ரோர்புறம்
நிகழ்ந்தது சிறிதெனு நீச ரோர்புறம்
புகழ்ந்துநீ தியைப்புனை புல்ல ரோர்புறம்.
|
36 |
|
|
|
|
சத்தியங்
கடைப்பிடித் தவர்க்குச் சார்வதோ
இத்தனை யிடுக்கணென் றேங்கு வாருளர்
அத்தலத் தாயினு மழிம்பர்க் கஞ்சியே
சித்தம்வைத் தொடுங்கிவாய் திறந்து செப்பிடார்.
|
37 |
|
|
|
|
மாயவர்த்
தகம்புரி மறுகிற் சேறலுங்
கூயினர் குதித்தனர் கொக்க ரித்தனர்
சீயெனப் புறக்கணித் திகழ்ச்சி செய்தனர்
பேயெனச் செருக்கிய பித்த ரென்பவே.
|
38 |
|
|
|
|
கலைத்தொழில்
பயின்றவக் கள்வர் வாயினாற்
கொலைத்தொழிற் குரியர்செங் கோன்மை காட்டியிங்
கலைத்தலி லென்பய னடங்கு வார்கொலோ
புலைத்தொழிற் பதிதரென் றுருத்துப் பொங்கினார்.
|
39 |
|
|
|
|
இன்னண
நிகழ்வுழி யிகலில் வேதியர்
சொன்னசத் தியங்கடைப் பிடித்துத் துன்னகர்
மன்னியோர் சிலரெதிர் வந்து வாய்மதம்
என்னவா மிவர்திறத் தென்கொ லோபிழை.
|
40 |
|
|
|
|
பாவியர்
தொகுநிரு வாண பட்டணங்
கோவணி பைத்திய னென்னுங் கொள்கைபோல்
ஆவணத் தழிம்பரு மறந்தி கழ்த்திய
ஜீவன்முத் தரையிகழ் செய்வர் செவ்விதே.
|
41
|