|
நிறந்துரூஉ
மயிலென நிந்தை செய்குதிர்
திறந்திற மெத்தனை தீங்கி ழைக்குதிர்
மறந்தொரு கொடுமொழி வழுத்து வாரலர்
அறந்திறம் பாமையென் றறிகி லீர்கொலோ.
|
42 |
|
|
|
|
குறுமையீர்
யாதுநுங் குறிப்புக் குற்றமோர்
சிறுமையு மியற்றிலர் தீங்கி யற்றுதிர்
வெறுமைகண் டவமதித் திடுதிர் வேதியர்
பொறுமையே யிப்புரம் பொடிக்குங் காண்டிரால்.
|
43 |
|
|
|
|
இன்றுநந்
தீங்கினுக் கிடர்செய் யாதிவர்
ஒன்றுநன் றுஞற்றலி னும்ப ரேயிவர்
நன்றுசெய் பவர்க்குயிர் நலிவு செய்யுநீர்
கொன்றுழல் விலங்கினுங் கொடியி ராமன்றோ.
|
44 |
|
|
|
|
இத்தகு
வனசில ரியம்பி நிற்கவும்
அத்தகு வனபல ரதட்டி யார்க்கவும்
மத்தமா யக்கடைத் தலைவன் மற்றிவை
உய்த்துணர்ந் துளமகிழ்ந் துலவுமெல்லையில்.
|
45 |
|
|
|
|
பதிதருக்
காநடுப் பரிந்து பேசிய
சதிசெயுங் கயவரைச் சமயங் காட்டிய
விதிதரு தண்டனை விதித்துந் தேர்கெனாப்
புதிதொரு விளம்பரம் புக்க தவ்வழி.
|
46 |
|
|
|
|
விளம்பரத்
தொனிசெவி வெதுப்ப மெல்லென
உளம்பரிந் தொதுங்கின ருண்மை சொற்றவர்
வளம்படு மாயையின் வலவர் தொக்கமர்க்
களம்படு சிலைத்தெனக் கௌவை வீங்கிற்றே.
|
47
|
|
|
|
|
அலைபடு
கடல்கிளர்ந் தனைய தாமெனப்
புலைபடு மானிடங் குழுமிப் பொங்கலிற்
சிலைபட வெங்கணுஞ் செலவு தீர்ந்துராய்
மலைபடக் கிடந்ததம் மாய வீதியே.
|
48 |
|
|
|
|
வெய்தினிற்
காவலர் விரைந்து பற்றியீர்த்
தெய்தினர் வேதிய ரிருவ ரைக்கொடு
செய்திறம் யாவையுஞ் செய்து வெஞ்சிறைப்
பெய்தன ரொள்ளொளி பிறங்கு வாளின்வாய்.
|
49 |
|
|
|
|
உறையுறப்
புகுந்திடு மொளிகொள் வாளெனக்
குறையறக் கனன்முகங் குளிக்கும் பொன்னெனப்
பொறையொடு முணர்வொடும் புகழொ டுங்கொடுஞ்
சிறையிடைக் கிடந்தனர் தெள்ளி யோர்களே.
|
50 |