|
நறைகமழ்
சோலையை நயமின் மன்னவன்
முறைபிறழ் முன்றிலை முரண்கல் வாரியை
இறையக லாதுளத் தெண்ணு நீரரை
சிறைமறி துயரெது செய்யத் தக்கதே.
|
51 |
|
|
|
|
ஜீவர
க்ஷணியமாச் சிறைபு குந்தினி
ஓவலி லானந்த போக முண்பதற்
காவலித் துடற்பொறை யற்ற நாடியோர்
நோவுறு சிறைத்துயர் நுனிக்கற் பாலரோ.
|
52 |
|
|
|
|
துன்புழந்
தன்றியெட் டுணையின் பின்றெனா
மன்பதைக் கிகத்தியல் வரைந்த சாசனம்
நன்புலத் தாக்கிய நவையில் வேதியர்க்
கின்பிலுந் துன்பினி தென்று நாட்டமே.
|
53 |
|
|
|
|
வேறு. |
|
|
|
|
|
பருவரல்
சுவைப்பா லுண்டி படர்கணீர் பருகும் பானம்
வருமவ மதிப்புப் பொற்பூண் வசைமொழி மதுர கீதம்
மருவுபூ வடுக்கு மெத்தை மௌனநித் திரைவண் செல்வத்
திருவநீண் மாடம் வெய்ய சிறைப்புறஞ் செவ்வி யோர்க்கே.
|
54 |
|
|
|
|
தள்ளருந்
துயரஞ் சித்த சஞ்சலந் தாபந் துக்கம்
விள்ளருந் துன்ப மாய வேதனை யுழக்கும் போதும்
எள்ளரும் விசுவா சத்தோ டிரமியந் தழுவிப் பல்கால்
உள்ளுவந் தேத்திப் போற்றி ஜெபிப்பருன் னதத்தை நோக்கி.
|
55 |
|
|
|
|
உற்றமெய்க்
குரவன் வாய்மை யுள்ளிமற் றெம்மின் முந்திக்
குற்றமில் குருதி சிந்திக் குவலயத் தொல்லை நீந்தி
முற்றுபே ரின்ப லோக முத்திவீ டடையத் தக்கான்
நற்றவ முடைய னென்னா நச்சியேக் குறுவர் நல்லோர்.
|
56 |
|
|
|
|
கோறலுக்
கிலக்காய் நேர்தல் குறிக்கொண்டு விசுவா சத்தின்
ஆறொழுக் கிழுக்கா வண்ண மருட்டுணை யெடுத்துப் பேசி
ஊறுமெய் யன்பி னாலே யொருவரை யொருவ ரூன்றித்
தேறுதல் புரிந்து சிந்தை தெருட்டுவர் திருவாக் கூட்டி.
|
57 |
|
|
|
|
நாடுவர்
சருவ லோக நம்பனைக் கருணைப் பௌவத்
தாடுவர் தெவிட்டா வுண்டி யருந்துவ ராரக் கீதம்
பாடுவர் துதித்துப் போற்றிப் பவித்திர பதாம்பு ஜத்துச்
சூடுவ ரன்பிற் கட்டித் தொடுத்தபைந் துணர்த்தே வாரம்.
|
58 |