|
|
|
|
1. |
அம்பரம
திரியேகத் துவத்தொன் றாகி
யருட்டிருவாக் குருவாகி யகில மீன்ற
நம்பரனுக் கொருமகவாய் ஜீவ ருய்ய
நடுநின்ற
நாயகத்தை நயந்தெந் நாளும்
உம்பருல குவந்துதொழு மஹாதெய் வத்தை
யொன்றான
வூர்த்தகதி வழியைக் காட்டி
இம்பருல கம்புரந்த வெம்பி ரானை
யென்றுகொலோ
கண்குளிரக் காணு நாளே. |
|
|
|
|
2. |
இல்லையொரு
நாமநர ஜீவ ரக்ஷைக்
கியேசுதிரு
நாமமலா லிகத்தி லென்று
தொல்லைமறை முறையிடுபே ரின்ப வாழ்வைத்
துரிசறநின்
றிலங்குபரஞ் சோதி தன்னைப்
பொல்லையெனப் புறக்கணியா தெனையாட் கொண்ட
பூரணபுண்
ணியநிலையைப் புகழ்ச்சி யோங்கும்
எல்லையிலாப் பேரருளி னிருப்பை நாயே
னென்றுகொலோ
கண்குளிரக் காணு நாளே. |
|
|
|
|
3. |
அருள்பழுத்த
திருமுகமண் டலத்தி னானை
யளிநிறைந்த
கமலலோ சனத்தெம் மானைத்
தெருள்பழுத்த ஜீவமொழி கனிவா யானை
ஜென்மவிடாய்
தணித்தருள்சீர் பாதத் தானை
மருள்பழுத்த மனத்தேனைத் தெருட்டி னானை
வான்கதிக்கு
வழிதிறந்த வலத்தி னானை
இருள்பழுத்த நரகடைத்த வெம்பி ரானை
யென்றுகொலோ
கண்குளிரக் காணு நாளே. |
|
|
|
|
4. |
மன்னுசுர
கணங்கள்ஜெய ஜெயவென் றேத்தி
வாழ்த்தெடுப்ப
வீற்றிருந்த மகிமைத் தேவைப்
புன்னரகீ டங்களையோர் பொருளா யுன்னிப்
புகலரிய
பெரும்பாவப் பொறைசு மந்து
தன்னுயிரைப் பரிந்தளித்த மேசி யாவைச்
சர்வபரித்
தியாகனைமெய்த் தரும வாழ்வை
என்னுயிருக் குயிராய வீசன் றன்னை
யென்றுகொலோ
கண்குளிரக் காணு நாளே. |
|
|
|
|
5. |
பன்னரிய
பரமபத நாடு நீங்கிப்
பவித்திரமாய்க்
கன்னிமரி பால னாகிப்
பின்னர்விரத் துவம்பூண்டு ஞான தீக்ஷை
பெற்றுவிதி
விலக்கோம்பிச் சீட ருக்கு
நன்னெறியின் றுணிபுணர்த்தி யருளி னானை
நரஜீவ
தாரகனை கம்பன் சித்தம்
இந்நெறியா மெனத்தெரித்த விரைவன் றன்னை
யென்றுகொலோ
கண்குளிரக் காணு நாளே. |