|
(பொ
- ரை) முத்திநகர், பரமபதம், திருநாடு, திருநகரம்,
மோட்சம், வீடு நித்திய ஆனந்தபதம், நித்திய ஜீவக்கழகம்,
சர்வத்துக்கும் மூலஸ்தானம், உத்தம மங்களஸ்தானம், உன்னத மண்டலம்,
பரமாகாயத்துச்சி, சத்தியமன்றம், புனிதமன்றம், தேவாலயம், பரம
சந்நிதானம்.
| |
உச்சிதபட் டணம்பதவி யூர்த்தகதி, பொன்னகர
மும்பர்நாடு
சச்சிதா னந்தபுரி தருமபுரி யடைக்கலபட்
டணஞ்சாம்ப்ராஜ்யம்
முச்சிகரி திகழ்சீயோன் முதுகுன்ற மும்முரச
முழங்குமுன்றில்
அச்சுதவேந் தரசிருக்கை திருக்குமரா லயம்பரிசுத்
தாவிமன்றம் 33
|
(பொ
- ரை) உச்சித பட்டணம், பதவி, ஊர்த்தகதி, பொன்னகரம்,
உம்பர்நாடு, சச்சிதானந்தபுரி, தர்மபுரி, அடைக்கலப்பட்டணம், சாம்பி
ராஜ்யம், பிதா குமாரன் பரிசுத்தாவி என்னும் திரித்துவமாகிய மூன்று
சிகரங்கள் பிரகாசிக்கின்ற சீயோன் என்னும் முதுகுன்றம், கர்த்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்னும் மும்முரசம் முழங்குகின்ற வாசல்,
பரிசுத்த கடவுள் வேந்தனுடைய கொலுமண்டபம், திருக்குமரேசன்
ஆலயம், பரிசுத்தாவியின் மாளிகை.
| |
புண்ணியமா நகரினைய பொற்புறழுந் திருநாமம்
பொருந்திநிற்கும்
நண்ணரிய திருநகர்க்கு நாற்றிசையும் புடைவளைந்து
மேலுங்கீழும்
அண்ணலர சாணைவழி யநாதிநிய மனமாக
வகண்டமாய
கண்ணகன்ற பெருவெளியே கடியரணாச் சூழ்ந்ததுதி
காந்தங்காறும்.
34
|
(பொ
- ரை) இப்புண்ணியமா நகரமானது இத்தகைய அழகிய
திருநாமங்களை உடைத்தாயிருக்கும். கடவுள் வேந்தனுடைய
ஆஞ்ஞைப்படியே அநாதிநியமனமாக அகண்டமாகிய விஸ்தாரமான
பெரிய வெளியிடமே சமீபித்தற்கரிய இத்திருநகரத்திற்கு நாற்றிசையிலும்
மேலுங்கீழும் வளைந்து காவல் பொருந்திய மலை அரணாகத்
திக்குகளின் முடிவுமட்டும் சூழ்ந்திருந்தது.
| |
கதிகூட்டி
யெமைப்புரப்பான் காதலனை யுவந்தளித்த
கருணைவள்ளல்
அதிபாரி சுத்தமெனு மழற்பிழம்பு பரந்துதிரண்
டவியாதோங்கி
எதிரேறு பகைதுமிய வெரிவீசி நீறாக்கி
யிலங்குஜோதிக்
கதிரேற விளங்கிநிற்கு மகழிசூழ் தழலாணங்
கடிநகர்க்கே. 35
|
|