|
கொடுவிடப்
பற்களே குழுமியோ ரவருளங்
கடுவிடங் கெழுமுபை கவினுமண் டபநிலை
தொடுகடற் புடவியைத் தொல்லைவாய் வைத்தவப்
படுகொலைப் பாதகப் பாந்தள்வாய் முழையரோ.
|
8 |
|
|
|
|
துட்டவெம்
புற்கணந் தொகுமுழைப் புதரின்வாய்ப்
பட்டமா னினமெனப் பருவரற் றளையொடுங்
கட்டுபா சத்தொடுங் கடியர்கொண் டுய்த்திடச்
சிட்டரோ ரிருவருங் குறுகினார் செவ்விதே.
|
9 |
|
|
|
|
அனையவோ
லக்கமா வமையறப் பகைமுனம்
முனைவவிப் பதிதரெம் முதுகடைத் தெருவில்வந்
தினையதே சத்திய மென்றெடுத் தோதியெம்
வினைசிதைத் தூர்ப்பிரி வினையுமுண் டாக்கினார்.
|
10 |
|
|
|
|
உலகவின்
பொழியுமென் றுள்ளுவர்த் துச்சிலர்
இலகுமா யச்சரக் கெதையுநா டாதுபோய்
விலகினார் வர்த்தகம் வீழ்ந்ததிம் மட்டுமோ
அலகையா திக்கமு மவமதிப் புற்றதால்.
|
11 |
|
|
|
|
இருவர்மற்
றிவரின்யா மேழையாத் திரிகராய்
மருவினன் றின்றெனின் மாயவர்த் தகமெலாந்
தெருவிலே வந்துசீ சீயெனப் பட்டபின்
பெருகுகே டேயலாற் பெறுதுமோ வூதியம்.
|
12 |
|
|
|
|
இம்மறைக்
கிழவர்கண் ணெதிருறும் பொழுதெலாம்
எம்முளத் தில்லவே யில்லையென் றுள்ளவோர்
செம்மனக் கரிமிகச் சினவிநின் றுயிர்தெறும்
அம்மகூற் றுவரெனற் கையமொன் றின்றரோ.
|
13 |
|
|
|
|
கொற்றவா
வோர்திகொல் லாதுகொல் லுங்கொலை
கற்றபா தகரிவர்க் கோறலே கடனெனாச்
செற்றமல் கினமுறைப் பாடெலாந் தேர்ந்துமுன்
சொற்றனன் றுஷ்கிரு தப்பெயர்த் தூர்த்தனே.
|
14
|
|
|
|
|
சொன்னதுஷ்
கிருதன்வாய் மொழிசெவித் தொளைபுக
நன்னிதா னன்னெனு நவையிலா னாங்கெழுந்
துன்னதா திபனெறிக் கொருவியோ ருறவுமற்
றிந்நகர்ச் சீலமு மருவருப் பெற்கரோ.
|
15 |