பக்கம் எண் :

384

  மாயசா லக்கடை மறுகுறா மரபும்வான்
தூயயாத் திரைசெலுந் துணிவுமோர்ந் தோர்சிலர்
சேயநன் னெறிசெலத் திருமினா ரீதுநன்
றாயதே யன்றிமற் றாவதோ தீமையே.

16
   
  பொன்கொலோ புவிபடும் பொருள்கொலோ யாவையும்
மின்கொலோ விளிதலி னெனவெறுத் துளமெனின்
என்கொலா மிவர்தமக் கெம்மனோர் மேற்பகை
நன்கொலா தென்றுமே நாசயோ சனையினே.
17
   
  உலகமா யச்செருக் கொல்லைநீத் துலகுளீர்
அலகையா திக்கம்விட் டகறலே நலமென
இலகுசத் தியமிசைத் தனமெடுத் திதுகொலாங்
கலககா ரணமெனக் கழறினான் கலைவலான்.
18
   
  ஒருதலை வழக்குநூ லொழுக்கினுஞ் செவ்விதாக்
கருதறப் பகையெனுங் கண்ணிலான் கறையிலாக்
குருதிசிந் திடவுளங் கொண்டபா தகன்முனஞ்
சுருதிநூற் றுறைவலான் சொற்பயன் படுவதோ.
19
   
                   வேறு.
   
  மெய்ப்படுநி தானியுரை கேட்டலும்வெ குண்டே
மைப்படும னத்தரும வன்மியெனும் வஞ்சன்
கைப்படுமி வர்க்குறுக டும்பகையர் வந்து
பொய்ப்படுகி லாக்கரிபு கன்றிடுக வென்றான்.
20
   
  ஒல்லையொரு மூவரெதி ரூன்றிமுறை யாக
இல்லையொரு பொய்யுரையி சைப்பதெது மெய்யே
அல்லதுவி ழித்துணைய விந்திடுக வென்னாச்
சொல்லினர்த னித்தனிது ணிந்துபிர மாணம்.
21
   
  இப்பரிசு சத்தியமி சைத்தபினெ ரிப்பன்
தப்பிலிநி தானியிவ னென்றலைத கர்க்க
முப்பொழுது நாடுறுமு ழுப்பகைவன் மாயக்
குப்பையென வெள்ளுவனிக் கோனகர வாழ்வை.
22
   
  தேசநடை யூர்நடைஜெ கத்துநடை யெல்லாம்
நாசநடை யென்றதின டக்குநடை கொள்ளான்
ஜேசுநடை நாடுநடை செவ்விநடை யொன்றே
ஈசனடை யேறுநடை யென்றுநடை கொள்வான்.
23