|
மண்டலநி
யாயநெறி வல்லதுரை ராஜ
கண்டகனி தானிபல காலுமுறை யாடி
விண்டபல தூஷணவி தங்கள்விவ ரிக்கின்
மண்டுமன வேதனையிம் மன்றுநவை மல்கும்.
|
32 |
|
|
|
|
மன்னர்தில
கன்பெயல்செ பூலையிவன் வைத
இன்னவென மன்றிடைது ணிந்தினிதி சைப்பின்
என்னிலப ராதிபிறர் யாவர்புக லெந்தாய்
உன்னமன மஞ்சுமுரை யுங்குழறு முண்மை.
|
33 |
|
|
|
|
மும்மலபி
தாக்கள்சௌ பாக்கியர்வன் மோகர்
எம்மினவு லோபர்படு காமுகரி டம்பர்
இம்மகிப ரைக்குடியெ ழுப்பிவிடு வேனென்
றம்மசெயு நிந்தையும ழிம்புமள வின்றால்.
|
34 |
|
|
|
|
என்னனைய
ரோர்சிலரி சைந்துளமி ணங்கித்
தன்னொடுநன் னூனெறித னைத்தழுவி நிற்பின்
மன்னுபல மாயவள மல்கியிசை பெற்ற
இந்நகரி லாவகையி யற்றிடுவ லென்றான்.
|
35 |
|
|
|
|
இப்பெரிய
தேசமுழு தும்மிசைப ரப்பி
ஒப்பொருவ ரின்றிநடு வோதிமுறை செய்யுஞ்
செப்பமுடை யாயுனையுந் தேவபய மில்லாத்
தப்புடையை யென்றுபழி சாற்றினனி தானி. |
36 |
|
|
|
|
இற்றிதமை
யாவெனிலி சைப்பலினி தென்னாச்
செற்றமோட கங்கருகு தேளனைய கோளன்
சொற்றலும றப்பகைது லக்கினைவி ளங்க
நிற்றியென நோக்கினனி தானியைநி கழ்த்தும்.
|
37 |
|
|
|
|
தொல்லைமறை
யைப்பழுது சொல்லியவ மாக்கும்
பொல்லைமத தூஷணியெ மர்ச்சைமுறை போற்றா
தெல்லையறு நிந்தனையி சைத்திழிவு செய்த
சொல்லையல கைக்குரிய ராஜ்ஜியது ரோகி.
|
38 |
|
|
|
|
இத்துணையை
யென்றுகரி யாயவரி சைத்த
சத்தியம றிந்தனைச பைக்கெமதி ரக்கச்
சித்தநிலை நன்குதெரி யச்சினவி டாதே
உத்தரம ளித்தனமு ரைப்பதுரை யென்றான்.
|
39
|