பக்கம் எண் :

387

                      வேறு.
   
இலக்கணை நீதி மன்றத் தியற்கையு மியலு நீதிப்
புலக்கணைக் கெடுக்க நின்ற புல்லறப் பகையின் போக்கும்
நிலக்கணக் காயு நீதி நிலவுநா ளென்கொ லாமென்
றலக்கணுற் றருணி தானி யமலனைப் பரவிச் சொல்வான்.
40
 
இந்நகர்க் கரசே ஜீவர்க் கிகபர சாத னந்தான்
பொன்னகர்க் கரச னுய்த்த பொதுவிதி விலக்கத் தோடு
மன்னில வுலகத் தாட்சி மறுதலைத் தெனின்வை தீகச்
சென்னெறிக் குதவா தென்னச் செப்பிய துண்மை தேர்தி.
41
 
உத்தம தேவ பத்திக் குயிர்விசு வாச மாகும்
அத்தகு விசுவா சத்துக் கருளுயி ரருள்வந் தெய்த
மெய்த்தொழும் புரிமை யாகு மெய்த்தொழும் பாவ தெம்மான்
சித்தத்துக் கமையுஞ் செவ்வி சித்தத்தைத் தெரிக்கும் வேதம்.
42
 
திருவச னத்துக் கொவ்வாத் தெய்விக வழிப்பா டெல்லாம்
பெருவழி பிடித்துச் செல்லும் பிரபஞ்சச் சேட்டை பேசின்
அருவருப் பாகுந் தேவ சித்தத்துக் காத லாலே
பொருவரு நித்திய ஜீவன் பொருந்தாதென் றதுவு முண்மை.
43
 
இந்நகர்க் கரசு மேவற் பரிசனர் குடிகள் யாரும்
பன்னரு மலபா தாலப் படுகர்புக் குறைவா ரன்றி
உன்னத பதத்தெம் மோடு மொருங்குபே ரின்பந் துய்த்து
மன்னுதற் குரிய ரல்ல ரென்றது மறாத வுண்மை.
44
 
சத்தியம் வினவி னார்க்குச் சாற்றிய விவற்றைத் தானே
வித்தரித் துரைத்தே னிந்த மெய்மைதூ ஷணமாங் கொல்லோ
இத்தகு முபநி யாசத் தேதொரு தவறுண் டென்னின்
உத்தம நியாயங் காட்டி பொறுத்திட றரும மென்றான்.
45
 
நடுவிகந் தொருபாற் கோடி நச்சர வென்னச் சீறிப்
படுபொரு ளுணரா னாய பாதகப் பசாசன் முன்னர்
வடுவறு நிதானி நின்று வழக்கிடு மரபை யோரின்
தொடுகட லுலக வேந்தன் றுரும்பன்றோ துறவிக் கம்மா.
46
 
திருக்கிளர் ஞானச் செல்வன் செப்பிய சிதைவின் மாற்றம்
உருக்கிய செம்பி னாகிச் செவிவழி யுருவிப் புக்குக்
கருக்கிய சிந்தை யாள னறப்பகை கதங்கொண் டொல்லை
பொருக்கென வுரறிப் பொங்கி யினையன புகல லுற்றான்.
47