தோமறு
குணநி யாய துரந்தர ரேயிந் நின்ற
பாமரற் கெதிர்வி ரோதம் பகர்ந்தமெய்ச் சான்றும் பின்னர்
வேமெரிக் கிடையே யிட்ட விறகென விரகொன் றில்லான்
கோமகற் கிழிவு காட்டிக் கூறிய கூற்றுங் கேட்டீர்.
|
48 |
|
|
ஆதிதொட்
டலகை ராஜ பரம்பரை யவனிக் குய்த்த
நீதியின் செயலு மிந்த நீணில வழக்குக் கொத்த
ஜாதியுஞ் சமயா சாரக் கொள்கையுந் தழுவி நின்ற
காதையு மாய்ந்து தீர்வை கழறுத லழகிற் றாமால்.
|
49 |
|
|
பண்டெங்க
ளரசற் கேவற் பணிபுரி பார்வோ னென்னுஞ்
சண்டனெம் மதவி ரோத தகுவராண் சிசுவை யெல்லாந்
தெண்டிரை யாற்றிற் பெய்து ஜீவனை வதைத்த செய்கை
மண்டல மறியு மிந்த மரபைநீர் மறந்தி டாதீர்.
|
50 |
|
|
நீணிலத்
தரசு செய்த நேபுகாத் நேச்சர் காலத்
தாணவச் சிலையைப் போற்றா தழிபுற மதத்தர் தம்மைக்
கோணைவெந் நெருப்புச் சூளை குளித்திட வெறிந்த கொற்றஞ்
சேணுறப் புகுந்தும் பாரிற் றிகரந்தமட் டுலாய தின்னும்.
|
51 |
|
|
தடங்கட
லுலகம் போற்றத் தனிக்குடை நிழற்றி யாண்ட
மடங்கலே றனைய கொற்ற மன்னவன் றரியு வாணைக்
கடங்கிடா மதவி ரோத வழிம்பனைப் பிணித்து வெய்ய
முடங்குளை வயவெஞ் சீய முழையிடைப் படுத்த தோர்மின்.
|
52 |
|
|
இத்தகு
பிரமா ணங்க ளெவற்றையு மீறி யாங்கள்
பத்திசெய் மார்க்கத் துள்ள பழுதெலாம் பரக்கத் தூற்றி
வித்தக நினைவால் வாக்காற் கிரியையால் விரோதஞ் செய்யுங்
குத்திரக் கலகி ராஜ துரோகியிக் கொடியன் காண்டிர்.
|
53 |
|
|
ஏதமில்
சான்றுக் கொத்த திங்கிவன் வாக்கு மூலம்
மேதையீ ரங்கை நெல்லிக் கனியென விளங்கிற் றெல்லாம்
ஆதலாற் குற்ற வாளி யென்பதற் கைய மின்றால்
ஓதுதிர் பேதி யாதும் முட்கருத் தென்றான் வெய்யோன்.
|
54 |
|
|
கிள்ளைக்கு
நீதி பூஞை கிளந்திடக் கேட்டல் போலும்
புள்ளிமான் மறிக்கு நீதி புலிசொல வினவல் போலுந்
தெள்ளிய நிதானி சீர்மை தெரிந்துரைத் திடுக வென்றான்
உள்ளறப் பகைபொல் லாங்கி னுருப்புணர் நடுவர் தம்மை.
|
55
|