பக்கம் எண் :

389

  நன்றெனத் துணிந்தீ ராறு நடுவரு நடுவி னீதி
மன்றொரு சூழ லுற்று மடமதச் செருக்கு விஞ்சிப்
புன்றலைப் புலமைச் சூழ்ச்சி தத்தமிற் பொருந்தி வாளாக்
கொன்றிடத் துணிந்து நீதா சனிக்கிது கூற லுற்றார்.


56
   
                   வேறு.
   
  எண்ணில்து ரோகம், பண்ணிய பதிதன்
திண்ணமி தென்னாக், கண்ணிலி சொன்னான்.
57
   
  இன்றிவ னைத்தான், கொன்றுயிர் கோடி
என்றுது ணிந்தே, நன்றிலி விண்டான்.
58
   
  கடியன்மு கத்தைப், படியில கற்ற
நொடியினி தென்றான், கொடியகு ரோதி.
59
   
  குறித்திவன் குற்றம், பொறுத்திட லாகா
ஒறுத்திடு கென்றான், கறுத்திடு காமி.
60
   
  நாணிலி சிந்தை, கோணிகு லீனன்
பேணலை யென்னா, வீணன்விவ ரித்தான்.
61
   
  பிணியொடு மித்துர்க், குணிதலை கொய்யப்
பணிதரு கென்றான், துணிகர னென்பான்.
62
   
  நீசனி வன்காற், காசுபெ றானென்
யோசனை யென்றான், மாசுறு வம்பன்.
63
   
  துரியநி லத்துக், குரியவ னிவனை
அரிசிர மென்றான், பெரியவி ரோதி.
64
   
                     வேறு.
   
  மித்திர பேதம்வி ளைத்த, குத்திர னைக்கொலை செய்ய
எத்தனை யோசனை யென்றான், சத்துரு வாயச ழக்கன்.
65
   
  வென்றிந டுப்புரி வீர, இன்றிவ னைக்கழு வேற்றிப்
பொன்றவ தைப்பினும் போதா, தென்றுநிட் டூரனி சைத்தான்.
66
   
  மாநில முற்றும யக்கி, ஆனிவி ளைக்கும ழிம்பன்
மேனிசி தைக்கென விண்டான், ஈனனி ருட்பிரிய னென்பான்.
67
   
  சத்திய மென்றுரை தந்த, அத்தனை யும்பொய்ய பத்தம்
எத்தனை விட்டிட லென்றான், புத்தியி லாமுழுப் பொய்யன்.
68