பக்கம் எண் :

390

                வேறு.
     
  இன்னண நடுவர்பன் னிருவரு மொழிய
என்னொரு துணிபுமற் றிதுவென நுவலா
அன்னிலை பழுதக லறவனை யெதிர்கூய்ப்
பன்னின னறப்பகை படுகொலைத் தீர்ப்பு.
69
   
                வேறு.
   
  படுபொருளைத் தெரித்தியென வினவுதலிற் பரமார்த்த
வடுவறுநன் னிலையுரைத்த மாதவற்குக் கொலைத்தீர்ப்பு
நடுவிகந்து நவிற்றினவா னாசமுறு நடுமன்றங்
கொடுமையினுங் கொடுமையிது குவலயத்திக் கொடுங்கோன்மை.
70
   
  குற்றவா ளியைப்பிணித்துக் கொலைத்தொழிலர் களத்துய்க்க
மற்றிவனைத் தளைபூட்டிச் சிறைச்சாலை மடுத்திடுக
கொற்றவனா ணையினென்று கூறினான் கொடுங்கோன்மைப்
பெற்றியெலா நிலைநிறுத்தும் பிணக்குடைய குணக்கேடன்.
71
   
  சொன்னவுரை முடியாமுன் சுருதிநூல் வலவனைக்கொண்
டந்நியமர் சிறைச்சாலை யடைவிக்க வருந்தவனைக்
கொன்னுனைவாள் வயவீரர் கொலைக்களத்துக் கொடுசென்று
மன்னவனா ணையைப்புரிந்து தெரித்தாரம் மறவனுக்கே.
72
   
  கொலைத்தீர்வைக் கொடுங்கூற்றங் குறுகிவெருட் டிடுபொழுதும்
அலைத்தீர்த்து விசித்தியாக்கை யரிந்தழலிற் பெய்பொழுதுஞ்
சிலைத்துமில னொருமாற்றம ஜேசுதிரு வடித்தொழும்பின்
நிலைத்தருமங் கடைப்பிடித்து நித்தியஜீ வனைக்கருதி.
73
   
  புற்புதநீ ருடற்பொறையைப் பூதூளி யிடைவிழுத்தி
அற்புதமெய் விசுவாசி யான்மநித்தி யானந்த
சிற்பரம ராஜ்ஜியத்தின் ஜேசுதிரு வடிநீழற்
பொற்புறவீற் றிருந்ததுவாற் புத்தேளிர் கணமுவப்ப.
74
   
  அஞ்ஞான விருளடைந்த வகத்தேமெய் யொளியலர
மெய்ஞ்ஞான விசுவாச விளக்கேற்றி யணையாது
பொய்ஞ்ஞானப் பொறிசெறித்துப் புகருலகம் புகுமட்டும்
சுஞ்ஞான நிலைகாக்குந் தூயாவி நலம்வாழி.
75
   
 

                நிதானி கதிகூடு படலம் முற்றிற்று.

                 நிதானபருவம் கவி, 803.