பக்கம் எண் :

392

  பழுதில் வேதியர் பகர்ந்தசத் தியத்தொடு பழகி
முழுது நன்னடை திருந்திய முறைமையென் னுளத்தில்
எழுதி யாயதவ் வுண்மையைக் கடைப்பிடித் திலனேற்
கழுது மல்குபா தலமலாற் பிறிதுண்டோ கதியே.

6
   
  துட்ட வல்வினைத் தொடர்பெலா மெவ்வணந் தொலையும்
இட்ட காமியச் சுவையெலா மெவ்வணம் விடுப்பல்
செட்டு வர்த்தகஞ் செல்லுமோ நன்னெறி சேரின்
நட்ட மாகுமே யென்றுளங் கவன்றன னலிந்தான்.
7
   
  இனைய தன்மைய னாகியே காந்தமுற் றிருந்தே
நினைவி னோங்கிய ஜீவசா க்ஷியையெதிர் நிறுவிப்
புனையு நன்மொழி யாற்பிழை பொறுக்கெனப் புகன்றீண்
டெனைய றிந்தனை யியம்புதி மதியெனக் கென்றான்.
8
   
                   வேறு
   
  நம்பி நல்லுரை நன்றென நன்மனச் சாக்ஷி
எம்பி யாமிரு வேம்ல மொன்றுபட் டென்றும்
இம்பர் மெய்ப்புரு டார்த்தமி யற்றுவ மென்னில்
உம்ப ருற்றழி யாநல முண்ணுவ மோர்தி.
9
   
  நன்று தீதுந விற்றுத லென்கட னாடி
நன்று ஞற்றின்வ ரும்பய னுண்ணுவ னானும்
நன்றி கந்தனை யேல்வரு துர்ப்பய னண்ணேன்
நன்று கூறியு மீறினை யாதலி னண்ப.
10
   
  ஆதி தொட்டென ருங்கட னாற்றிய வென்னை
ஏதி லானென வெள்ளினை யென்மதி கொள்ளாய்
நீதி யுற்றநெ றிபிடித் தாயலை நீசப்
பாதை பற்றினை பாவிய ரோடுற வாடி.
11
   
  புனித ராயபு ரந்தர வேந்தினைப் போற்றாய்
மனிதர் கைப்படு மர்ச்சையைப் போற்றுதி வாளா
நனிதி கழ்ந்திடு நல்லற நச்சிலை நாளுந்
துனிதி கழ்ந்திடு தீவினை யீட்டுதி தோழ.
12
   
  உற்ப வந்தொட்டி மட்டுமு வந்துண வாதி
அற்பி னல்கிய றிவளித் தாரிடர் போக்கி
நிற்பு ரந்தநி ருமல வேந்தைநி னைத்துப்
பொற்பி னன்றிபு ரிந்திலை பேயடி பூண்டாய்.
13