பக்கம் எண் :

393

  பொய்தி ருட்டநி யாயம்பொ றாமைபொல் லாங்கு
கைத வந்தந்தி ரங்கொடுஞ் சூதுவன் கண்மை
வெய்தி னாயவி னைத்திற முள்ளன வேட்டுச்
செய்து தீவிடம் ஜீவனுக் கீட்டினை தீயோய்.

14
   
  தூய ஞானஞ்சு கிர்தஞ்சு சீலமி வற்றால்
ஆய செல்வம் டைந்திலை யாலநி கர்க்கும்
மாய சூனிய வஞ்சக வர்த்தகம் பேணித்
தீய செல்வந்தி ருந்தினை சிந்தனை யில்லாய்.
15
   
  வஞ்ச மாதிய துர்க்குண மேமனை மக்கள்
பஞ்ச பாதக மாதிபஞ் சாமிர்த பானம்
விஞ்சு பொய்முத லாயவை மெய்யணி சாந்தம்
அஞ்சு கின்றிலை தீமடி பேணுதி யந்தோ.
16
   
  முன்னம் வேதியர் பன்முறை மோசத்தைக் காட்டிச்
சொன்ன நன்மதி கொள்ளலை தூயநல் லாவி
உன்ன கத்துமல் லாடிய தோர்கிலை யொன்றாம்
என்னை யும்பகை யாக்கினை யேமதி யில்லாய்.
17
   
  ஈண்டு தொண்டனுக் கீட்டிய விம்சையும் யாக்கை
கீண்ட ரிந்தழ லுக்கிரை யாக்கிய கேடுங்
காண்ட லிற்கவல் கிற்றிசின் னாட்படக் காணாய்
மூண்ட வித்தகு சிந்தனை காணுவை மோசம்.
18
   
  இற்றி தோரலை நீரெழுத் தியாக்கையென் றெண்ணாய்
சுற்ற நட்புரி மைத்திறம் யாவுநிற் சூழ்ந்து
பற்று மாயவ லைத்தொட ரென்பதும் பாராய்
நிற்றி மோசப்ப டுகரி னூனெறி நேராய்.
19
   
  உள்ளி னாயவு ணர்ச்சிமற் றுன்னத ராஜன்
நள்ளி ரக்ஷணி நல்கிடு நல்லடை யாளம்
வள்ள லாரருண் மல்கிய மாண்புறு வைகல்
எள்ளு வாயலை யீதுன்னி ரக்ஷணை நன்னாள்.
20
   
  நிண்ண யந்தெரி ரக்ஷணி யநவ நீதம்
உண்ணி லாத்தும தாபித நோயொருங் கோடும்
நண்ணு மெய்ப்பர மானந்த சிற்சுக நம்பி
புண்ணி யன்பொற்றி ருவடிச் சூழலிற் போதி.
21