|
எத்து
ணைப்பெரும் பாவிய ராயினு மெள்ளா
வித்த கக்கும ரேசனை மெய்விசு வாசப்
பத்தி யாயிறு மட்டும்ப ராவுதி யென்னின்
முத்தி வீடுபு குந்தனை முத்தனு மானாய்.
|
22 |
|
|
|
|
ஆயு
ளெல்லைய றந்திர மாதலின் முன்னே
மாய வாழ்வைவ ரைந்துநம் மானைமன் றாடித்
தூய வாவிது ணைக்கொடு நன்னெறி துன்னென்
றாய சொன்மதி விண்டன னந்தரங் கத்தில்.
|
23 |
|
|
|
|
ஜீவ
சாக்ஷிதெ ருட்டுசெஞ் சொல்லமு தத்தை
ஜீவ பாதைக்குத் திவ்விய கோனக மாக்கி ஜீவ
நாடியு யிர்த்தநல் லோரையின் செவ்வி
ஜீவ பாதைசெல் வான்மனங் கொண்டனனன் செய்யோன்.
|
24 |
|
|
|
|
பழியும்
பாவமு மல்குமிவ் வூரினிப் பாழ்பட்
டொழியு மெனபதற் கெட்டுணை யையமொன் றில்லை
அழிவி லாதசீ யோன்மலைத் தேசத்தை யாக்கும்
வழியை நாடுவல் யானென வுள்ளம்வ லித்தான்.
|
25 |
|
|
|
|
தெருளுஞ்
சிந்தையின் முந்துறு தெய்விக வேந்தன்
அருளு மார்ந்துர மாக்கலி னாக்கிய வெல்லாப்
பொருளுங் காதல்வ ருக்கமும் போற்றிய புந்தி
மருளும் போக்கிநம் பிக்கைமெய்ந் நூல்வழி வந்தான்.
|
26 |
|
|
|
|
முப்ப
ரம்பொரு ளாயலோர் புண்ணிய மூர்த்தி
துப்பு றழ்ந்ததி ருவடிச் சூழலை நாடி
இப்பு விப்படு மீடணை யாவுமி கத்துக்
குப்பை யாயுவர்த் தேகினன் கோன்முறை கொண்டு.
|
27 |
|
|
|
|
எரிவி
ழுந்திக்க டிநகர் நீறிடு மெல்லை
உரிய தன்மனை மக்களு மொக்கலும் வெந்து
கரிவ ரேயென வேங்கியு யிர்த்தழு கண்ணீர்
சொரிய நின்றுது டித்தன னாங்கொரு சூழல்.
|
28 |
|
|
|
|
இருவ
கைப்பற்றி னாழ்ந்தவெ னைக்கரை யேற்றத்
திருவு ளத்தருள் பூத்ததி ரித்துவ தெய்வம்
பொருவ ருங்கரு ணைக்கட லாதலிற் பொன்றா
தருள்வ ரங்கவர்க் கும்மெனத் தேறின னாறி.
|
29 |