|
கருவிற்
செய்கையி னாயவெந் தீவினைக் கள்வன்
பெருவ ழித்தலை பேய்பிடித் தோடிய பித்தன்
ஒருவ ரும்மிலர் பாவிய ரில்லெனை யொப்பார்
திருவ ருட்டுணை யாயதென் னென்றுதி கைத்தான்.
|
30
|
|
|
|
|
எண்ணி
னெத்தனை யாச்சரி யம்மிஃ தென்னா
நிண்ண யத்தொடி ராப்பக லோரிடை நில்லான்
கண்ணு றக்கமற் றோர்தனி யாய்நெறி கண்டு
புண்ணி யக்கும ரேசனை வாழ்த்தினன் போனான்.
|
31 |
|
|
|
|
நம்பிக்கை
நன்னெறிபிடித்த படலம் முற்றிற்றி.
|
|
|
|
|
|
கிறிஸ்தவன்
கதிவழிகூடிய படலம்
|
|
|
|
|
|
|
|
கதிபு
குந்தமெய்ந் நிதானியின் கொலைக்களங் கண்டு
புதிய நம்பிக்கை தெருண்டுநன் னூல்வழி போந்த
அதிச யத்தையாய்ந் தானந்த பரவச மடைந்து
முதிய வேதிய னிலையினை நாடுவான் முயன்றேன்.
|
1 |
|
|
|
|
சென்று
கூடினன் யான்சிறைச் சாலையைத் திருமி
நின்று கண்டனெ னிடையறாக் கனவுறு நினைவில்
மன்ற னாயகன் றிருவருண் மாட்சியென் றுணர்ந்துந்
தன்று ணைப்பிரி வாலகந் தளர்ந்தனன் சதுரன்.
|
2 |
|
|
|
|
புணையி
ழந்துநீர் நிலையுழல் வாரெனப் புகலற்
றிணையி ழந்தமா னினமெனக் கலக்கமுற் றினைந்தும்
அணைக டந்தநீ ரழினும்வா ராதென வாறி
உணைவு நீங்கினான் றிருவருட் பலங்கொண்ட வுரவோன்.
|
3 |
|
|
|
|
மாறி
லாப்பெருங் கருணைமன் வரப்பிர சாத
வீறு பெற்றுமா யாபுரி வெங்கொடு வினையின்
தூற டர்ந்தமா யச்சிறைத் துயர்க்கட லொருவி
ஏறி னான்கதிக் கரைவழி யிகல்கடந் தெளிதில்.
|
4 |
|
|
|
|
வழுவி
னூனெறி கூடிய வருண்மறை வாணன்
உழுவ லன்பொடு முளங்கனிந் தருட்டிற முன்னித்
தொழுவன் பன்முறை தோத்திரம் புரிந்துமன் றாடி
அழுவ னின்னுமோர் வழித்துணை யமையுங்கொ லென்னா.
|
5 |