பக்கம் எண் :

396

  இனைய சீலனா வேதிய னிரவுநண் பகலுந்
துனைவி னூல்வழி துருவிட வாங்கொரு சூழல்
அனைய ணைந்தவான் கன்றென நம்பிக்கை யடுத்து
வினைய மோடுகை கூப்பிநின் றினையன விளம்பும்.

6
   
  ஐய வையவென் னாருயிர்க் காருயி ரனையாய்
பொய்ய ளைந்தவிப் புலைக்குடி லோம்பிய புலையேன்
வெய்ய மும்மலச் சேட்டையின் விழுமநோய் துடைத்தீண்
டுய்யு நன்மதி யொண்மருந் தூட்டினை யுரவோய்.
7
   
  விண்ண டைந்தவவ் விடலையும் வேதிய நீயுங்
கண்ண கன்றமா யாபுரிக் கடைமறு கணைந்து
புண்ணி யச்சுவி சேக்ஷமான் மியமழை பொழிகால்
அண்ணல் சத்திய முளைத்ததென் னகத்தினி லறவோய்.
8
   
  இருவிர் நுங்குண சீலமு மொழுக்கமு மிறுமட்
டொருவ ரும்விசு வாசமு மூக்கமும் பொறையின்
அருமை யுங்கண்டு கேட்டலி னடியனே னுள்ளந்
திருமி மெய்வழிப் பட்டதா லருட்செயல் செய்யோய்.
9
   
  பொருனின் செல்வமும் பூதலத் துரிமையும் போக்கி
அருளின் செல்வமெற் காக்கினை யகத்துணர் வெழுப்பி
மருள றுத்தனை மற்றிதற் கியற்றுகைம் மாறு
தெருளும் புந்தியோய் தெரிகிலே னுறதென ஜெகத்தில்.
10
   
  குரவ னும்புநர் ஜநநதாய் தந்தையுங் கோமான்
புரவு நூனெறித் துணைவனும் பொன்றுநா ளளவும்
உரவு நீர்நிலத் துனையலாற் பிறரிலே னுண்மை
கரவி லோயெனைத் தெருட்டுத னின்கடன் காண்டி.
11
   
  ஏக நின்றநீ ணெறிக்கிரு வேமுமிங் கிணங்கி
மாக நாடடை காறும்யாம் வழித்துணை யிசைந்து
போக வுன்னினன் றிருவருள் கூட்டிய புதுமை
ஆக நேர்ந்தன மீண்டென வுரைத்தன னறிஞன்.
12
   
  ஜீவன் முத்தனன் னம்பிக்கை தெருளுரை திகழ்ந்த
தேவ பத்தியுஞ் சற்குண சீலமுந் தெளிவுந்
தாவ ரும்பர மார்த்தமுஞ் சமைந்தநன் னிதானி
ஆவ னோவிவ னென்றகத் துன்னுவா னானான்.
13