| |
நித்த
சத்தியந் தெரித்துயிர் விடுத்துநீ றாய
வித்த கத்தெழி னிதானியே வெந்தசாம் பரினின்
றித்த லத்துயிர்த் தெழுந்துவந் தனன்கொலோ வெனது
சித்த வெண்ணமே யெதிருறீஇத் திகழ்வது கொல்லோ.
|
14 |
| |
|
|
| |
உன்ன
வேறில னுன்னத கிருபைமே லுய்த்த
என்ன கத்துநம் பிக்கையை யெனக்கெதிர் திகழ்த்தி
தன்னெ றிந்துணை யாக்கினர் நம்பிரா னென்னாத்
தன்ன கத்துளஞ் சலித்துவந் தினையன சாற்றும்.
|
15 |
| |
|
|
| |
நம்பி
நல்வர வாகுக நல்வழி திகழ்த்தி
இம்ப ரான்மவீ டேற்றத்தி னிசைத்திட லெல்லாம்
உம்பர் தம்பிரான் றிருவருண் மாட்சியென் றுணர்தி
வெம்பு தீவினைக் கீட்டுத லலகைசெய் வினையால்.
|
16
|
| |
|
|
| |
அனைய
தாதலி னகிலலோ காதிபன் றொழும்பர்
வனையு நல்வினைக் கருவியாய் மகிதலத் துலவி
வினையி யற்றுவர் கருவியின் றாகியும் வேந்தன்
நினைய வாயின சராசர நிகிலலோ கங்கள். |
17 |
| |
|
|
| |
ஆட்டி
னாலன்றி யாடுமோ பம்பர மருள்வந்
தீட்டி னாலன்றித் தீவினைத் தொடரறுத் தீர்த்துக்
கூட்டு வார்கொலோ ஜீவரைக் கதிவழி கூறிக்
காட்டு வேதியர் சொற்பயில் கிள்ளையைக் கடுப்ப. |
18 |
| |
|
|
| |
பொருண
யந்தெரி யேம்புலை வினைபுரி பொல்லேம்
இருண யந்தெரி பாதலக் கிடங்கரு கிருந்தேன்
அருண யந்தெமைப் பிடித்திழுத் திவ்வழி யாக்கக்
கருணை யங்கடல் வளாகத்துக் கதிகடைப் பிடித்தேம். |
19 |
| |
|
|
| |
முற்று
மெம்மிடர் கடிபவர் முத்திநா டாளுங்
கொற்ற வன்னவர் திருவருட் பேற்றினைக் குறிக்கொண்
டுற்று நோக்கிநன் னெறிபிச காதொரு மித்து
நற்ற வம்பயில் வாங்கடை காறுநம் பிக்காய். |
20 |
| |
|
|
| |
ஊனு
நல்லுயி ரும்மென வொன்றுபட் டின்று
நானு நீயுவே றிலையென நட்டன னுன்னை
வானும் வையமுஞ் சான்றென வுரைத்தனன் மதுரத்
தேனும் பாலுமொன் றாயசெஞ் சொன்மறை வாணன். |
21 |