பக்கம் எண் :

398

  எந்தை சொற்றதே யமையுமா யினுமெனக் கினிநீ
தந்தை யானுனக் கொருசிறு தனையனாந் தயைகூர்
அந்த ணாளநீ யென்னெஜ மாநன்யா னடியன்
சொந்த நிற்கெனப் பகர்ந்தனன் றூயநம் பிக்கை.
22
   
  எள்ள ருங்குணத் திருவரு மிவ்வண மாக
நள்ளி ரக்ஷணை நலவழி பிடித்துட னடந்தார்
தெள்ளு ஞானமு முணர்ச்சியுஞ் சேர்ந்தன வனையார்
உள்ளு மெய்விசு வாசமு மொழுக்கமு மொப்பார்.
23
   
  ஊன்மு திர்ந்துவீ ழுடற்சுக போகத்தை யுவர்த்துத்
தேன்மு கந்துணும் வண்டெனச் சிந்தனைக் கினிய
நூன்மு கந்தெடுத் தநுபவ முதிர்ச்சியை நோக்கி
ஆன்ம ஞானசம் பாஷணை யருந்தியே குவரால்.
24
   
  இருவ ரிப்பரி சேகுழி யகந்தையி னிறுமாந்
தொருவன் வெள்ளிய செருப்படி யுண்டவ னுலவி
வருவ தாகிய செயலறிந் தருந்தவ மறையோன்
திருவி னாயுனைத் தெரியுமா றிவைதெரிக் கென்னா.
25
   
  எங்கு ளாய்பெய ரென்கொலா மெத்தொழி லுடையை
மங்க லம்புனை மனைமகா ருளர்கொலோ மரபின்
நுங்கு லத்தவர் யாரெங்கு சேறியுன் னோக்கென்
சங்கை தீர்விடை தருகென வினவினான் சதுரன்.
26
   
  கேட்டி யுத்தரங் கிளக்குவல் கிளர்பெருஞ் செல்வம்
ஈட்டு மிச்சக தேசமே யென்ஜெந்ம தேசம்
நாட்டி னுள்ளவர் தன்னய னெனவொரு நாமஞ்
சூட்டி னார்தொழி லெவ்வகை யினும்பொரு டொகுத்தல்.
27
   
  போலி யென்றொரு துரைச்சியின் புத்திரி காமி
தாலி கட்டிய மனையவ டனையருல் லாச
வாலி பக்குணத் தாலெனை மதிக்கிலர் மனையாள்
சீல மும்பலர் காமிக்கு நடையுடைச் செல்வி.
28
   
  இச்ச கன்சம ரசனிரு முகனிவ ரென்றாய்
மச்ச ரைக்குடன் விறந்தவ ரவர்க்கியான் மருகன்
குச்சி தன்பக்க மாறிவீண் குதர்க்கிடாம் பீகன்
நச்சு வாக்கியா தியரெமர் நனிநிதி படைத்தோர்.
29