|
வாக்கு
விஞ்சிரு நாக்கனென் பவன்மறை யோதிக்
கூக்கு ரற்படுத் ததிகப்ர சங்கியாங் குருக்கள்
மீக்கி ளர்ந்தபே ராசையால் வேதியர் வேடத்
தீக்கை பெற்றனன் யானவற் குண்மையாஞ் சீடன்.
|
30 |
|
|
|
|
இத்த
லத்துவாழ் வினுக்கிடை யூறொன்று மின்றி
ஒத்து வந்தமட் டொள்ளியோய் முத்திநா டுறுமிப்
பத்தி மார்க்கத்துப் படர்குவல் பருவர லாதி
தத்து மேலிடி னேர்வழி விலகிப்பின் சார்வல்.
|
31 |
|
|
|
|
என்றிவ்
வாறுதன் னயன்விதந் துரைத்தரு மெழில்கூர்
மன்றல் வேதிய னுண்மையே யுரைத்தனை மதிக்கின்
நன்ற றிந்தன னுன்னிலை யாவையு நயந்தீண்
டொன்று கூறுவல் கேட்டியென் றுரைத்தன்மே யினனால்.
|
32 |
|
|
|
|
பத்தி
வேடங்கொண் டயலுளார் மருண்டிடப் பகட்டி
எத்தி நீசமட் பொருட்குவை யீட்டுத லிழிவாங்
குத்தி ரக்கொடு வினையுமாங் குறித்திடிற் கொடியோய்
எத்தி றத்தினுங் கேடுகா ணிகபரத் தெவர்க்கும்.
|
33 |
|
|
|
|
குறித்துக்
கோனகர் வழிப்படிற் குளிர்பனி வெயிலான்
மறித்த சண்டமா ருதத்தினால் வலியநீர்ப் பெருக்காற்
செறித்த பல்பெரு மோசத்தாற் றியங்கிடா துயிரை
வெறுத்து முன்னெதி ரூன்றிடு மெய்ப்பத்தி வேண்டும்.
|
34 |
|
|
|
|
களங்க
மற்றமெய்ப் பத்தியோ டுழைத்திடிற் ககன
வளங்கொண் முத்தியுந் திருவருட் பயத்தினால் வாய்க்கும்
உளங்கொ ளாப்பத்தி வேடத்தா ருறுநர கென்றே
விளங்க மெய்ம்மறை யோலிடு மிடந்தொறும் விளித்தே.
|
35 |
|
|
|
|
இத்த
குந்தெய்வ பத்தியொ டெத்துயர் வரினுஞ்
சித்த சஞ்சல மடைந்திடர்ப் படாதெதிர் செறுத்துன்
மத்த சிந்தனை வரைந்துடன் வருதியேல் வருக
ஒத்தி டாதெனி னுவந்தசெய் யெனவெதிர்த் துரைத்தான்.
|
36 |
|
|
|
|
மலநு
கர்ந்துழல் சூகரம் வான்சுவைக் கரும்பின்
நலம்வி ழைந்திடா வாறுபோ னச்சுல கத்துப்
புலையின் பந்நுகர் பொறியிலி பொருவில்பே ரின்ப
நிலைவி ழைந்திடா தேகினன் றனிதுணை நேடி.
|
37 |