உலகன்
காமுகன் பேயனென் போருயர் குலத்துத்
திலக ரென்றகஞ் செருக்கியோர் தன்னய னோடும்
அலகி லாதவா தாயவா ரியிலறப் படித்த
பலக றைப்படு லோபிபாற் பணக்கலை பயின்றோர்.
|
38 |
|
|
பலவந்
தம்படு தந்திர மிச்சகம் பத்தி
குலவு வேடமென் றிவற்றினாற் பொருட்கொள்ளை கொள்ளும்
வலவர் தன்னயன் வரவுகண் டவனொடு மகிழ்ந்து
கலக லத்தன ரிருவர்முன் கதித்திடல் கண்டார்.
|
39 |
|
|
ஆய
காலையிற் றன்னய னருகணைந் தைய
தூயர் போலிரு துறவிக டுணிந்துமுன் செல்வார்
நீய றிந்தனை யெனினவர் நிலைநிகழத் தென்றான்
பேய னாம்பணப் பிரியன்றன் னயனிது பேசும்.
|
40 |
|
|
முன்செ
லும்பர தேசிகள் சுருதிநூன் மொழியைப்
பொன்சொ லாமெனப் போற்றுவர் பிறவுரை போற்றார்
என்சொன் னாலுந்தஞ் சொற்பிடி வாதத்தை யிகவார்
இன்சொற் கண்டிதத் தெனையவ மதித்தன ரென்றான்.
|
41 |
|
|
கருதி
வந்தபே ராசையாங் காமுகன் கடுகிச்
சுருதி நீதிய ருலகநீ தியர்தமைத் துணிவுற்
றொருதி றத்தினு மவமதித் துரைத்திட லொழுக்கன்
றிருதி றத்துநும் மிடையென்கொல் விகற்பமற் றென்றான்.
|
42 |
|
|
எம்பி
கேளவ ரெத்துய ரினும்வழி யிகவார்
வெம்பி ரும்பகை சூழினுந் தங்கொள்கை விடுக்கார்
இம்பர் நிந்தைதூ டனமணி யெனப்புனைந் திடுவார்
தம்பி ரான்துணை யாய்ச்செல்வர் தனிவழி யிரவில். |
43 |
|
|
அடுக்குந்
துன்பெனி னயல்வழி நுழைந்துபின் னடுப்பல்
ஒடுக்கும் வெம்பகை யுறிற்றக்க வேடங்கொண் டுய்வல்
மிடுக்கி னிற்பொருள் பெற்றுப்பொற் பாதுகை மிலைவல்
விடுக்க ருந்துணை யாயென்றும் பொருட்செல்வம் விளைப்பல்.
|
44 |
|
|
காண்டி
வேதியர் பக்திமெய்க் காரண பக்தி
தேண்டு காரிய பக்தியென் றெய்வித பக்தி
ஈண்டி ரண்டிலொன் றெதுபிழை யெதுசரி யென்னா
மாண்ட நூன் முக மதினலீர் வகுத்துரைக் கென்றான்.
|
45
|