|
ஈது
தன்னய னிசைத்தலு முலகனாண் டெழுந்து
கோதின் மெய்ப்படு காரண பக்திசெய் குநரே
தீதி னித்திய ஜீவவாழ் வுறுமென நம்பிக்
காத லித்திக வாழவெலாங் கசந்துகை விடுவார்.
|
46 |
|
|
|
|
அலகி
லாப்பொருள் யாவையு நரனுக்கென் றாக்கி
உலகை வாழ்விக்குந் தெய்வத்துக் கிவர்பக்தி யுவப்பின்
றிலகு நன்மதி படைத்திக வாழ்வையெள் ளாது
குலவு காரிய பத்தியே யுவப்பதாங் குணிக்கின்.
|
47 |
|
|
|
|
வரைவி
லலாதுபன் மலர்தொறு மருவிவெம் மதுவை
விரைவி னீட்டுதே னீயென விதிவிலக் கிகந்துந்
தரையி லேசம்பத் தாக்கலுங் காக்கலுந் தருமம்
அரவு போன்மதி யடைமினோ வெனுமருள் வேதம்.
|
48 |
|
|
|
|
பண்டு
மிக்கசம் பத்தபி ராம்படைத் ததுவும்
எண்டி சாமுகத் திசைபெற்ற சாலமோ னியைந்த
தெண்டி ரைப்பெருங் கடலன செல்வமு மெதனால்
உண்டு பட்டன காரிய பத்தியா லுணர்மின்.
|
49 |
|
|
|
|
என்று
துன்மதி தெருண்டுல கன்னெடுத் தியம்ப
நன்று சொற்றனை நாளுமற் றிதுவென்ற னாட்டம்
பொன்றுங் காலத்துப் பொருளலாற் றுணையெது புகல்வீர்
என்றுங் கைப்பொரு ளில்லவர்க் கெவருற விகத்தில்.
|
50 |
|
|
|
|
ஆத
லாற்பொரு ளீட்டுதன் மதிக்கழ கதனைக்
கோதென் றெள்ளுதல் வைதிகர் பயித்தியக் கொள்கை
தீதி லாப்பத்தி வேடமே பெரும்பொருள் சேர்க்குஞ்
சாத னங்களிற் சிறந்தமெய்ச் சாதன மாமால்.
|
51 |
|
|
|
|
இத்த
லத்துப தேசிக்குங் குருவுக்கு மிறைமை
உத்தி யோகிக்கும் வணிகற்கு முலப்பிலா துழைக்குங்
கைத்தொ ழிற்கரு மிகளுக்கு மிரவலர் களுக்கும்
பத்தி வேடத்தால் வரும்பலன் பகருமா றரிதே. |
52 |
|
|
|
|
பாரில்
யாவரு நம்புவ ரஞ்சுவர் பகையார்
ஊரி லேமரி யாதையுண் டுவப்பன கிடைக்குஞ்
சோர ரும்பொரு ளீகுவர் சொல்லெங்குஞ் செல்லும்
ஓரிற் பத்திவே டத்தருக் கொப்பெவ ருலகில்.
|
53 |