பக்கம் எண் :

402

 

புனையும் பத்திவே டத்தினைப் பூதலத் தெவரும்
நினைவி னாலுற மதித்தலி னிருமல னாமம்
அனைவ ராலுந்துத் தியம்பெறு மையமொன் றில்லை
கனைக டற்புவி முழுவது நன்மையே கதிக்கும்.

54
   
  கள்ள மாயபொய்ப் பத்தியாற் கருதிய கருமந்
தெள்ளி தாகவே சித்திபெற் றிடுதலில் ஜீவ
வள்ள லாருளங் கொண்டன ரென்பதே மரபாம்
எள்ளி யின்றெனல் பேதையர்க் கியல்பென விசைத்தான்.
55
   
  பேய னின்னணம பிதற்றலு மேனைய பித்தர்
நாய கன்றரு சுருதிக்கும் யுத்திக்கு நமக்கே
ஆய நேரனு பவத்துக்கு மொத்துள வதனான்
மாய மற்றநின் கட்டுரை வன்மையென் சொல்கேம்.
56
   
  எண்ணி நீயெடுத் தியம்பிய விந்நியா யத்தை
மண்ணில் யாவரே மறுப்பவர் வான்வழி தொலைந்து
நண்ணி னேஞ்சில யோசனை நன்றுநன் றுனது
நிண்ண யங்கடைப் பிடித்தன மெனநிகழ்த் தினரால்.
57
   
  கண்ணுங் காதுமி லார்தமி னேர்வழி காட்டி
நண்ண லுஞ்சொலக் கேட்டலு மொக்குமிந் நால்வர்
எண்ண ரும்புரு டார்த்தமற் றதுவிது வென்னா
நிண்ண யித்தலுந் தம்மிலே புகழ்தலு நினைக்கின்.
58
   
  பேயன் சொற்றநி யாயத்தை மறுத்தெதிர் பேசத்
தூய வேதிய ரெம்மிலு நியாயசூக் குமர்கொல்
ஆயி னுங்கடா விடுத்தறி வாமென வடுத்துப்
போயி னாரகஞ் செருக்கிய பூரியர் மாதோ.
59
   
  இருவ ரைக்கிட்டி நாலவரு மிறுத்தன ரெதிர்கூய்ப்
பொருவில் வேதிய புகறியுந் தரமிதற கென்னா
மருவு தெய்விக பத்தியா லுலகத்து மலிந்த
திருவை யெய்துத னன்றலாற் றீதன்று தேரின்.
60
   
  பொருளி னானன்மை யுளவெனி னப்பொரு ளீட்டத்
தெருளும் பத்தியைத் தெரிந்திட றீங்கெனப் படுமோ
மருள றத்தெரிந் துரைத்திநீ மறைவலோ யென்றான்
இருள றுத்தறுத் திரிப்பினு மிருட்படு முலகன்.
61