பக்கம் எண் :

403

  தூய ஞானத்துக் குழவியுஞ் சொல்லுமற் றிதுபோல்
மேய வோர்பதி னாயிரங் கேள்விக்கு விடையெம்
நாய கன்னெனை நாடுதி ரற்புத நயந்தன் றேய
வுண்டியா லென்றதை யேழைகா ணினைமின்.

62
   
  உண்டி யாலுல கத்தினுக் குரியசம் பத்தாற்
பெண்டி ராற்பெரும் புகழ்ச்சியை விரும்புபேய்க் குணத்தாற்
கொண்ட பத்தியின் கோலத்தைக் குவலய நகைக்கும்
அண்டர் நாயக னருவருப் பாரிதை யறிமின்.
63
   
  அலகை யின்குழாஞ் சூனியக் கபடிகண் மார்க்கர்
உலக ஞானிகண் மாயசா லகர்கதி யொழுக்கம்
விலகி யோர்களே பத்திவே டத்தைமேற் போர்ப்பர்
இலகு மெய்க்கிறிஸ் தவரிதைக் கனவினு மிகழ்வார்.
64
   
  முன்னர் மோகத்தை முனிந்திடாச் சிகேமெனு மூடன்
கன்னி காதலாற் கடும்பொரு ளாசையாற் கடைத்தோற்
சுன்ன மிட்டின ஜனத்தொடு வெட்டுண்டு தொலைந்த
துன்ன லீர்கொலாம் பத்திவே டப்பலத் துரிமை.
65
   
  நெஞ்சஞ் சாப்பரி சேயர்வை தவிகள்பா னிலவி
நஞ்ச மன்னதீப் பொருணயந் துலகத்துநடித்த
வஞ்ச மாயபொய்ப் பத்திமா காதிபன் கோபம்
விஞ்சி யாக்கிய சாபத்தை விளைவித்த தறிமின்.
66
   
  அருளை நச்சிமெய்ப் பத்திசெய் யடியரோ டமர்ந்தும்
பொருளை நச்சியே பொய்ப்பத்தி செய்தவப் புல்லன்
இருளை நச்சிநா ணிட்டிறந் தொழிந்தமை யென்றுந்
தெருளை நச்சியோர் சிந்தையுட் டிகழ்வது தெரிதிர்.
67
   
  மித்தை யாயசம் பத்தினைக் கீர்த்தியை வேட்டு
வித்த கப்புனி தாவியை விலைக்குத வென்னும்
மத்த னாயசீ மோன்திருத் தொண்டன்வாக் குதித்த
நித்த சாபத்தை யடைந்தமை நீணில நிகழ்த்தும்.
68
   
  பத்தி வேடத்துப் பதகரைப் பகைத்தரு வருத்து
நிதத தண்டனை விதிக்கின்ற நிருமல தெய்வம்
எத்த ருக்கநு கூலரென் றிசைத்தலெத் தனையாம்
புத்தி யீனமேத் தனைகொடும் பாதகம் பொல்லீர்.
69