மெய்ப்ப
டும்பத்தி யானன்மை விளையுமே யன்றிப்
பொய்ப்ப டும்பத்தி யானன்மை பொலிந்திட லாகா
செய்ப்ப டும்பயிர் செழிக்குந்தெண் ணீரினா லன்றி
அப்ப டும்பலன் றருபயி ரவியும்வெந் நீரால்.
|
70 |
|
|
மிடியன்
வேந்தவே டந்தரித் திரவின்மேம் படுவன்
விடியி னூரவ மதிக்குமால் வேடநீத் துழல
நொடியிற் பத்திலே டத்தர்க்கு மன்னவா நுதலிப்
படியி லேவரு மதிப்பவ மதிப்பும்யாம் பார்த்து.
|
71 |
|
|
ஆவின்
றோல்பொதிந் தழிவுசெய் புலியெனப பத்தி
மேவு வேடத்த ருலகபோ கங்களை மிசைவர்
நாவி னக்கியின் புறுத்துயி ருண்ணுநச் சாப்போல்
தீவி னைந்நயங் காட்டியே நரகுய்க்குந் திண்ணம்.
|
72 |
|
|
அழியுஞ்
செல்வம்வேட் டிடுதவ வேடமா மென்றல்
பழியும் பாவமும் பாழத்தபேய்ப் பத்தியும் பழுதும்
இழிவு மாயவஞ் ஞானமு மாமென வெள்ளி
மொழவ ராலருண் ஞானநூன் முறையுணர் முதியோர்.
|
73 |
|
|
பத்தி
யந்தரு வுளத்தெழுந் தருண்மழை பருகிச்
சத்தி யந்தழைத் தோங்கிமெய் யறமலர் தாங்கி
உத்த மந்திகழ் கருமமாம் பலன்றொகுத் துலவா
நித்தி யானந்த ஜீவமாக் கனிதரு நிலவி.
|
74 |
|
|
மித்தை
யங்குதித் தெழுபத்தி வேடமா மெட்டி
குத்தி ரப்பொருட் டழைமல்கிக் கொடுவினை மலர்ந்து
சுத்த வக்கிர மக்கடுக் காய்ப்பலன் றொகுத்து
நித்தி யக்கொடு மரணத்தைக் களிந்திடு நினைமின்.
|
75 |
|
|
கரும
நன்றெனிற் கருமத்தின் பலனுநன் றாகுங்
கருமந் தீதெனிற் கருமத்தின் பலனுந்தீ தாகும்
நிரும லன்றிரு மறையுமிந் நிலத்தவ ரவர்தங்
கருமம் போற்றக்க பலனடை வாரெனக் கழறும்.
|
76 |
|
|
இன்ன
வாகப்பூர் வோத்தர சாதன மெடுத்து
நன்னி லைப்படு நியாயதாட் டாந்தத்தை நாட்டி
அன்ன தற்கமை யத்திருட் டாந்தமு மடுக்கிப்
பன்னி னான்மறை யாரியன் பூரியர் பதுங்க.
|
77 |
|
|
சிறந்த
பேரருட் பலத்தினாற் சத்தியந் திகழ்த்தும்
அறந்தி றம்பிடாற் கெதிர்சொலா தணில்விட்ட நாய்போல்
மறந்தி றம்பிடா நால்வரும் வாயடை பட்டுப்
புறந்தி ரும்பினார் முகங்கரிந் துள்ளமும் புழுங்கி.
|
78 |
|
|
ஈண்டு
வேதிய னென்னருந் துணைவவிங் கிழிமட்
பாண்ட மாகிய நமக்கெதி ரூமையாய்ப் பதுங்கின்
ஆண்டு தேவநீ தாசனத் தருகழற் சுவாலை
மூண்ட போதிவர் நிலைமையென் னாமென மொழிந்தான்.
|
79 |
|
|
விட்டு
முந்தினர் நால்வரை யிருவரும் விரைந்து
திட்டி வைத்துநூல் வழிபிச காதுசெவ் வேகி
வெட்ட வெள்ளிடை யாயவோர் மெய்விடா யாற்றி
கிட்டி யாருண வருந்தினர் தேறினர் கிளர்ந்தார்.
|
80 |
|
|
கிறிஸ்தவன்
கதிவழிகூடிய படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
மெய்க்கிறிஸ்
தவர்க ளாய வேதிய ரிருவர் தீமை
கைக்குந ராகித் தூய கதிவழி துருவிச் சென்று
மைக்கரு மனத்து மல்கும் வஞசக மடமை யாதி
பொய்க்குணத் திரளி னோங்கும் பொருளாசைத் திடர்வந்
துற்றார். |
1 |
|
|
அத்திட
அரறிச் செல்லு மளவையி னருகோர் பக்கல்
புத்தெனு நரகங் காந்த பொறியுடைப் பேழ்வாய் கொல்லோ
நித்திய நாசந் தொக்கு நிலவுவெங் குகையோ வென்னப்
பித்துல கரைவாய்ப் பெய்யும் பெரியவோர் பிலத்தைக் கண்டார்.
|
2 |
|
|
சொன்னவிப்
பிலத்தை யேபொற் சுரங்கமென் றுலகஞ் சொல்லும்
முன்னரோர் சிலர்தாஞ் செல்லு முறைநெறி விலகி யேகி
அந்நிலை யறிவான் கிட்டி யடுத்தன ரடுக்கா முன்னந்
துன்னிடி விழுந்து சாய்ந்து தொலைந்துயி ரழிந்தா ரந்தோ.
|
3 |
|
|
அணித்தொரு
மனித னின்றாங் கருள்வழிப் போக்கர் தம்மைக்
குணித்திவண் வம்மின் வம்மின் கொழுநிதிக் குவையீண் டுள்ள
கணித்தள விடுதற் கொவ்வா காண்மினீர் வம்மின் வந்து
மணித்திர ளவாவுக் கேற்ப வாருதிர் வம்மி னென்பான்.
|
4 |