|
ஆங்கவ
னெறியிற் செல்லு மறவரை விளித்து நீவிர்
ஈங்கணைந் துமக்கு வேண்டு மிருநிதித் திரள்கைக் கொண்மின்
தாங்குபே ரின்ப லோகஞ் சார்தற்குத் தகவீ தன்றோ
நீங்கரு நிதிநீத் தேகு நிராசையோர் புலமைத் தன்றால்.
|
5
|
|
|
|
|
வடுவிலா
வையத் தியாண்டு மன்புரு டார்த்தமூன்றில்
நடுவண தெய்துங் காலை யிருதலை நலனு மெய்தும்
நடுவண தெய்தா னாயி னன்ணுவ னுலையிற் பெய்தாண்
டடுவது போற்றுன் பென்ற வறவுரை தெருளீர் கொல்லோ.
|
6 |
|
|
|
|
என்றுள
மருளக் கூவு மிருங்குரல் செவியின் முட்டி
நன்றறி வுறுநம் பிக்கை நலம்புரி குரவ வாண்டு
சென்றியா மடுத்து நோக்கித் திருமுதல் சீர்மைத் தாங்கொல்
ஒன்றுநின் மதியே தென்றா னுத்தம னுரைப்ப தானான்.
|
7 |
|
|
|
|
எம்பிநீ
மருளே லந்த விரும்பிலத் தியற்கை தேர்வல்
பம்பிய நாச மோசப் படுகரென் றறிதி யாண்டும்
அம்புவி மானி டங்க ளாசைப்பேய் பிடித்துத் தள்ள
வெம்பிவீழ்ந் திறக்குங் கோடி வேதனை யுழக்குங் கோடி.
|
8 |
|
|
|
|
அறநெறி
பிடித்துஞ் சில்லோ ரறிமடம் பூண்டாண் டேகி
உறவரு நாசத் துற்றா ருன்னத நோக்கிச் செல்லுந்
துறவுளேம் விலகி யாண்டோ ரடியிடத் துணிது மேனுந்
திறவிடைக் கவிழ்த்துங் காண்டி சிறிதுமோ ரைய மின்றால்.
|
9 |
|
|
|
|
அங்குநின்
றுரக்கக் கூவு மழிம்பனிவ் வுலகத் தாய
பொங்கிருந் துரோகம் பூத்த பொருளாசைக்குலத்தி லுள்ளோன்
இங்கிவன் றாதை யூதா செனுங்குருத் துரோகி பாட்டன்
எங்குங்கே யாசென் றோது மெஜமாநத் துரோகி யாமால்.
|
10 |
|
|
|
|
வேதியர்
குலத்துக் கெல்லாம் விக்கினம் விளைக்கு மிந்தக்
காதக னமையு மிந்தக் கிடங்கரிற் கவிழ்க்க வுன்னி
ஆதரித் தழைக்கின் றானா லணுவெல்லை கடத்து மாயின்
வேதனைப் படுகர் வீழ்வே மெய்மையீ தைய வோர்தி.
|
11 |
|
|
|
|
ஆசைப்பேய்
பிடித்த நால்வ ரடுக்கிலிவ் வழிம்பன் கூற்றால்
நீசப்பாழ் நிதிக்கி டங்கை நேர்ந்துயிர் மடிவா ரென்றற்
கீசத்து மைய மின்றா லென்றுவற் புறுத்தி நன்கு
பேசிப்பின் விளித்து நின்ற
பிசாசனுக் கீது சொன்னான்.
|
12 |