விண்டுயிர்க்
கேடு சூழும் வெகுஜநத் துரோகி யென்னுங்
கண்டக வுனக்குன் றந்தை கள்ளயூ தாசுக் குற்ற
தண்டனை வருக நின்சொற் சாந்துயி ரிழவே மென்னா
மிண்டனுக் குரைத்து மேலே துணையொடும் விரைந்து சென்றான்.
|
13
|
|
|
அருட்டுணை
யமைந்த தொண்ட ரகன்றுநூ னெறியிற் சென்றார்
திருட்டுவே டத்தர் நால்வர் பொருளாசைத் திடருற் றேறி
மருட்டுரை கொண்டு கிட்டி மண்ணிடி விழுந்தவ் வொல்லை
இருட்டடர் படுகர் வீழ்ந்தா ரென்னுற்றா ரென்ப தோரேன்.
|
14 |
|
|
அவாவிலார்க்
கில்லா தாகுந் துன்பமற் றஃதுண் டாயிற்
றவாதுமேன் மேலுந் துன்பஞ் சாருமென் றுரைத்த நீதி
உவாமதி யுதித்த லோடு முள்ளிரு ளிரிந்து சிந்தத்
திவாவெனத் தெருண்டு பாதை சென்றுவே தியரைக் கண்டேன்.
|
15 |
|
|
உத்தம
திருவ ருஞ்சென் றுன்னத ராஜ வீதி
வித்தக நெறிசெல் வோர்க்கு விழிக்கறி குறியாய் நட்ட
சித்திரச் சிலையைக் கண்டு தீட்டிய வெழுத்தை வாசித்
தத்தகு பொருளை யுள்ளி யாய்ந்துரை யாட லுற்றார்.
|
16 |
|
|
விப்பரன்
றெருண்டு நம்பி விழிக்கெதிர் தோனறிக் காட்சி
இப்புறந் திரும்பி நோக்கா தேகெனத் திரும்பி நோக்கி
உப்புத்தூ ணான லோத்தின் மனைவியை யுள்ளு கென்னாச்
செப்பிய தெமையாட் கொண்ட திருவருண் மாட்சி யென்றான்.
|
17 |
|
|
திருவரு
ளெனக்குத் தந்த தேசிக வென்னை யானே
அருவருக் கின்றே னிம்மட் டறிவிலா துளம யங்கிப்
பொருவருங் கேட்டுக் கோடிப் புகாவகை தெருட்டா யென்னில்
ஒருவரும் லோத்தில் லாள்போ லுப்புத்தூ ணாதல் திண்ணம்.
|
18 |
|
|
ஆண்டகை
யருளே நின்வாக் குருவமா யடிய னேனை
ஈண்டிய நாச மோச விருட்சுரங் கத்தி னின்று
மீண்டின துய்யு மாறு விலக்கியா தரித்த தெந்தாய்
தூண்டியென் ஜீவ சாக்ஷி துடிக்கின்ற தின்னுங் காண்டி.
|
19 |
|
|
கற்பனை
கடந்த லோத்தின் காதலி யொருத்தி யேயோ
தற்பரற் கெதிரா யுள்ளந் தருக்கிய கோராக் காதி
அற்பரோ தருநூற் றைம்பா னழிம்பருங் குறிக ளாவார்
பொற்புறு மிவற்றை நோக்காப் புந்தியே புதுமைத் தன்றோ.
|
20 |