பக்கம் எண் :

407

ஏதமில் பரலோ கத்து யாத்திரி கரையே மாற்றிப்
பாதகம் புரியு மிந்தப் படுகுண தோஷி தேமா
சீதெலா முணரான் கொல்லோ வெச்சரிப் படையா தென்னே
மாதுயர்க் கடற்குள் வீழன் மதிகொலோ கண்ணை மூடி.
21
 
  என்றிவை தெருண்டு தான்ற னேழைமை யுணர்ந்து மேனோர்
பொன்றிடு மடமை யுள்ளிப் பொருமியும் புகன்ற மாற்றம்
நன்றென விதயத் துள்ளி நம்பிக்கை வதன நோக்கி
ஒன்றுநீ கேட்டி யென்னா மறைவலா னுரைக்க லுற்றான்.
22
 
  ஆதிநந் தனவ னம்போ லமைவருஞ் சிறப்பில் வைத்த
கோதிலா வளங்கொள் சோதோங் குடிகணன் றெள்ளிச் செய்த
பாதக வினைக்கு நோந்த படுகனன் மழையை யுள்ளி
மேதினி யுயுமா றுய்த்த வியனடை யாள மீதால்.
23
 
  தெய்வத்தை மதியா ராகித் தீவினை துணிந்து செய்யும்
மைவைத்த மனத்தா ரெல்லா மற்றுமித் தகைய வாய
மெய்வைத்த குறிகள் கண்டு விரைந்துளந் திரும்பா ராகிற்
கைவைத்து நீதித் தண்டங் கனற்சிறைக் கடற்கு ளுய்க்கும்.
24
 
  உத்தம தேவ சித்த முவப்பொடு தெரிந்து கொள்ளா
அத்திறத் தவரின் னாரென் றறிகில மாத லாலே
எத்திறத் தவர்க்கு முண்மை யிசைத்தனங் கடனா மென்றும்
புத்துயி ரளித்தீ டேற்றல் புண்ணியப் பகுதி யாமால்.
25
 
  கதிவழி விலகிச் சென்றக் கடுங்குழி கவிழா தெம்மை
மதிநல னளித்துக் காத்த மாதயா பரனே முற்றும்
விதிவழி திகழ்த்திக் காப்பார் வித்தக விரைதி யென்னாப்
பதிதிரு நாமம் போற்றித் துதியொடு பரவிச் செல்வார்.
26
 
                          சுரங்கப் படலம் முற்றிற்று.
 
விடாதகண்டப் படலம்
 
 
  ஞாலமீக கதிவழி நாடி யேகுநற்
சீலவே தியரிரு வோருஞ் சில்பகல்
சாலவை திலநலந் தழைத்த தண்ணிய
வாலிய நறுநிழல் வழங்கச் செல்லுவார்.
1