பக்கம் எண் :

408

  வேறுசின் னாளொரு பாங்கர் வெவ்வினைத்
தூறடர் கானகந் துருவித் தீவிலங்
கூறுசெய் திடுமென வுளங்க லங்கியும்
ஆறியுந் தேறியு மருளி னேகுவார்.

2
   
  பருவபே தங்களாற் பலவ கைப்பிணி
மருவிநின் றுடற்றினும் வருந்திச் சில்பகல்
திருவரு ளாயசஞ் சீவி யத்தழை
பெருவலி யளித்தலிற் பெரிது செல்குவார்.
3
   
  கருத்தன்யாத் திரிகரைக் கருதி யாக்கிய
திருத்தகு சத்திரத் தணைந்து சிற்சினாள்
அருத்துமெய்ஞ் ஞானபோ னகமுண் டாவிநன்
மருத்துறழ் செவ்வழி மகிழ்ந்து நாடுவார்.
4
   
  பொருந்துவ ரருந்தவம் புரிவ ராதரம்
விருந்துவந் தாருண வளிப்பர் வெம்மையால்
வருந்துவ ருடன்மன மகிழ்வர் மெய்விடாய்த்
திருந்திளைப் பாறிப்பின் னேமுற் றேகுவார்.
5
   
  உறையுளே கதிவழி யுண்மை யேயுற
விறையருட் டுணையற மியற்று செய்வினை
மறைமொழி யுணவுமன் றாட்டு றக்கமாத்
துறையறி சூழ்ச்சியர் துருவி யேகுநாள்.
6
   
  உன்னதத் தநாதிதொட் டொழுக்க மேவிய
திந்நிலம் புரப்பதற் கீண்டு லாவிய
தந்நெறி யிரக்ஷணை யமைத்த நீரது
சென்னெறி யெங்குமெய் வளஞ்செ றிப்பது.
7
   
  தூநலம் பயப்பது சுகிர்த முள்ளது
மானவ ருயிர்க்குயி ராய மாட்சிய
தூனமில் லருண்மறை யொழுக்கின் மேலது
வானமும் பூமியு மிணைத்த மாண்பது.
8
   
  சத்தியத் தருக்குலந் தழைய வார்ந்திவண்
நித்திய பலன்விளை விக்கு நீரது
மித்தையின் விடத்தரு வேரொ டுங்கெட
இத்தலத் தறவெறிந் தியங்க வல்லது.
9