பக்கம் எண் :

409

  கைத்ததீ வினைக்களை கட்டுக் காறொறும்
மெய்த்தரு மப்பயிர் விளைக்கும் பாலது
பித்தளை யுயிர்களின் பிறவி நோய்கெடப்
புத்துயி ரளித்திடும் புதுமை சான்றது.

10
   
  அண்ணலார் கருணையி னளவி னாயது
வண்ணவான் றூய்மையிற் றெளிந்த மாண்பது
நண்ணுமன் பினிற்சுவை நயம்ப யப்பது
புண்ணியம் பொலிந்தெனப் பொலியும் பொற்பது.
11
   
  மூழ்குவார் தீவினை முருக்கு மாறுவந்
தூழ்முறை யலையெறிந் தொழிக்க லான்றது
வாழ்வுள வம்மினென் றழைக்கு மாறுபோல்
கேழ்கிளர் திரையொலி கெழுமு நீரது.
12
   
  அருந்துவார்க் கழல்வினை யவிக்கு நீரது
திருந்துநல் லுளக்களி செறிக்குந் தேனது
பொருந்துவெம் பசிக்கமு தாய பொற்பது
பெருந்துயர்ப் பிறவிவெம் பிணிம ருந்தது.
13
   
  தாரகத் துருவமாய்த் தரணி மேயவிந்
நீரகத் துறுநர ஜீவர் நித்திய
ஏரகத் துறுகுண மியைந்தி லங்குவார்
பாரகத் தியற்குணம் படைத்தி டாரரோ.
14
   
  உலகநீ ரொழுக்கெலா முயிரைக் காப்பினும்
விலகரு மிருத்துவை விலக்கற் பாலவோ
குலவுமிச் சீவநீர் கொள்ளு வாரெனின்
இலகுமெய் நித்திய ஜீவன் யார்க்குமே.
15
   
  தாகமின் றாம்பசி தணியுஞ் சஞ்சல
சோகமும் ரோகமுந் தொலையு நித்திய
போகபூ மியினலம் பொருந்தும் புல்லிய
தேகமும் புனிதமாம் ஜீவ நீரினே.
16
   
  தாவரு மினையநற் றகைமை சான்றிடு
ஜீவமா நதியெனுந் தேய்வ மாணதி
மேவிய தீரத்தை யடுத்து விண்ணகர்க்
காவல னருள்வழி கதித்த தென்பவே.
17