பக்கம் எண் :

410

  நதியிரு மருங்குறு நறுந்தண் பூம்பொழில்
மதியுயர் சினைத்தலை மறிய வோங்குதல்
புதியநீர் பருகுபுண் ணியப லத்தினாற்
கதிபுகுந் திடவெழுங் காட்சித் தாமரோ.

18
     
  பூவலர் கற்பகப் பொலன்பொ தும்பருந்
தாவரு நல்லறச் சாலிப் பண்ணையுங்
காவலன் விரும்புபூங் காவ னங்களும்
ஜீவநீர் பாய்தரிற் செழிப்புற் றோங்குமே.
19
     
  ஞாலர க்ஷகன்றிரு வுருவை நாடிமெய்ச்
சீலர்கண் ணொடுமனந் தெருண்டு பற்றல்போல்
வாலிய தருக்களை வல்லி சாதகங்
கோலிநாண் மலரொடு கொளுவித் தோன்றுமால்.
20
     
  மேனனி நோக்கிய வியன்ற ருப்பயன்
மாநில நோக்கிய மரபின் காட்சிதான்
வானுற நோக்கிய வடியர் மாணடை
பூநல நோக்கிய புதுமை போலுமால்.
21
     
  துற்றிள நீாக்குலை சுமந்து முற்றுமட்
டுற்றநெட் டிலையதெங் கொருங்கு தாங்குதல்
கொற்றவன் கடைவரை குறிக்கொண் டன்பரைப்
பற்றுகை நெகிழ்ந்திடாப் பான்மை காட்டுமால்.
22
     
  நறியமுக் கனிநறை நறுந்தண் பூநறை
சிறையளி முரன்றுமொய்த் தருந்தித் தேக்குறல்
மறையவர் குழீஇத்துதி பகர்ந்திம் மாநுவேல்
நிறையரு ணுகர்ந்திடு நீர்மை காட்டுமால்.
23
     
  தெள்ளுநீர் வாவியிற் றிகழ்ந்த தெண்ணறும்
வள்ளவாய்க் கமலங்கண் மலர்ந்து தோன்றுதல்
விள்ளருந் திருவரு ணிறைந்த வித்தக
உள்ளமீக் கிளர்ந்தொளிர் வதன மொக்குமால்.
24
     
  முதிர்சுவை முக்கனி முதல தீங்கனி
நதிவளம் படுத்தபன் னறுஞ்செ ழும்பயன்
கதிவழிப் போக்கரை யூட்டிக் காதலிற்
பொதுமையா நுகர்வரப் புனித தீரத்தர்.
25