பக்கம் எண் :

411

 

தருமமார் தருசெழுஞ் சாலி வண்பயன்
அருமறைச் சுரபிநின் றளிக்குந் தூயபால்
கருமவான் சுவைக்கரும் பீன்ற கட்டியோ
டிருமையு நுகர்ந்துதேக் கெறிவ ரெங்குமே.

26
   
  பொன்னுல கத்துவாழ் புனிதர் சாயையே
இந்நதி தீரத்தி னிரும ருங்கினும்
மனனுமா னிடங்களின் படிவம் வாய்ந்தெனத்
துன்னுவ ராற்றிரி கரண சுத்தராய்.
27
   
  கேவல நகர்புகக் கெழுமு பாதையிச்
சீவகங் கையையடுத் தினிய தேன்சொரி
காவகத் திடைசெலக் கருதி யாரியர்
பூவரு துறக்கமே போலு மீதெனா.
28
   
  புண்ணிய நதியின்மான் மியமும் பொற்புறு
தண்ணிய நறும்பொழிற் சமைவுந் தம்மகத்
தெண்ணிமன் வியந்துரை யாடி யேம்பலோ
டண்ணலை யிறைஞ்சிமன் றாடிப் போயினார்.
29
   
  ஜீவநீர்க் கங்கையாந் திவ்ய தீர்த்தத்திற்
பாவநோ யொருங்கறப் படிவர் பத்தியோ
டாவியா ரோக்கிய மடைவர் சூடுவர்
பூவலர் நறுந்தொடை புசிப்பர் தீங்கனி.
30
   
  தீர்த்தனோ ரன்பினைச் சிந்தை செய்துசெய்
தார்த்தியிற் போற்றுவ ரவச மாகுவர்
சீர்த்தியைப் புனைந்துரை செய்வர் தெய்விக
கீர்த்தனை யகக்களி கிளைப்பப் பாடுவார்.
31
   
  பிறிதொரு புலன்விழை யாத பெற்றியர்
பொறிநுகர் வனவெலாம் புனித மாதலின்
அறிதுயி லமர்ந்திளைப் பாறி யாவியிற்
செறிபர மானந்தந் தேக்கு கிற்பரால்.
32
   
  இத்திற நம்பிக்கை யிலகு வைதிக
வித்தகர் பல்பகல் விபத்து விக்கினஞ்
சித்தசஞ் சலமொரு சிறிது மின்றியே
முத்திமார்க் கத்திலே முன்னிட் டேகுநாள்.
33