|
மன்றலாற்
றணிகரை மருங்கு பல்வளம்
ஒன்றிய பூம்பொழி லொருவிச் சேய்மையிற்
கன்றிய கடுஞ்சுரங் கனலுங் கானிடைச்
சென்றதக் கதிவழி யுளந்தி கைக்கவே.
|
34 |
|
|
|
|
வேறு |
|
|
|
|
|
கொடிதி
னிற்கொடி தாயவிக் கொடுஞ்சுடு பாலை
கொடிதெ னப்படும் யாவிலுங் கொடிதெனத் தேர்ந்து
கொடிதி னுக்கந்தங் குணித்தது மூதுரைக் கூற்றேற்
கொடிது மற்றிதிற் பிறிதெது குவலயப் பரப்பில்.
|
35 |
|
|
|
|
கொள்ளி
யாரழல் பரந்தன கொடுஞ்சுரங் குறுகில்
துள்ளி யாருயிர் துடிக்கும்வாய் நீரறச் சுவறும்
உள்ளம் வேமுத ராக்கினி மிகுத்தலி னோடிக்
கள்ள மார்க்கத்துப் புகவருங் காலடி கடுகி.
|
36 |
|
|
|
|
பசைய
றப்புலர்ந் துலர்ந்திடு பாழ்ந்தரைப் பரப்பில்
மிசைக ரிந்துகு நலந்தரு தாவரம் வெந்து
வசைத ழைத்திளி வரவெனுங் கள்ளியே வளருந்
திசைந டுங்குமத் தீச்சுரக் கொடும்பெயர் செப்பின்.
|
37 |
|
|
|
|
கண்டு
கண்டுமூ வாசைப்பேய் பிடித்தலைக் கழிக்கும்
மண்டு கானனீர் வேட்டுவேட் டாருயிர் மறுகுங்
கொண்ட மானத்தீச் சுடச்சுட வுளங்கொதி கொதிக்கும்
விண்ட வாய்வரு பழப்புகை மெய்யெலாங் கருக்கும்.
|
38 |
|
|
|
|
பண்டு
பன்மணித் திரள்செறி செந்தமிழ்ப் பரவை
மொண்டு கற்பனைக் கவிபொழி முகிற்குலஞ் சிதறி
எண்டி சாமுகத் திரிந்தன விக்கொடுஞ் சுரத்தின்
மண்டு வன்மிடிக் கொழுங்கனற் பிழம்பினை மறுகி.
|
39 |
|
|
|
|
உன்ன
தாதிப னொருசுத னுலவிய மேனாள்
சென்னி சாய்க்கவு மிடமிலை யெனக்கெனத் தெருமந்
துன்ன ருங்கடுந் துயருழந் தனரெனி னுலகப்
புன்ன ரங்களுக் கென்னவா மிகத்திடர் புணரின்.
|
40 |
|
|
|
|
மடியெ
னுங்குப்பை மட்டிடர் மதில்புடை வளைப்பப்
படியின் மேயதுர்க் குணகிருத் தியங்களாற் படுத்த
குடியி லங்குபா ழுறையுளொன் றுளதவண் குணிக்கிற்
கொடிய நித்திய தரித்திரை தனிப்பெருங் கோட்டம்.
|
41
|